Viral Video : இரு சக்கர வாகனத்தின் மீது திடீரென பாய்ந்த சிறுத்தை.. நொடி பொழுதில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்!

Leopard Jumps on Motorcycle | வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிவது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சிறுத்தை ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது பாயும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : இரு சக்கர வாகனத்தின் மீது திடீரென பாய்ந்த சிறுத்தை.. நொடி பொழுதில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்!

வைரல் வீடியோ

Published: 

29 Jul 2025 22:18 PM

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான மற்றும் ஆச்சர்யமூட்டும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், இரவில் சாலையில் சென்றுக்கொண்டு இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது சிறுத்தை ஒன்று பாயும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. சிறுத்தை இரு சக்கர வாகனத்தின் மீது பாயும் வீடியோ, அந்த இரு சக்கர வாகனத்தின் பின்னால் சென்ற காரின் டேஷ்கேமில் பதிவாகியிருந்தது. தற்போது அந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரு சக்கர வாகனத்தின் மீது திடீரென பாய்ந்த சிறுத்தை

காடுகளை அழித்தல், கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், உணவு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்கள் காரணமாக அவ்வப்போது வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிடுகின்றன. இவ்வாறு குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வன விலங்குகள் பெரும்பாலும் பொதுமக்களுக்கு எந்த வித சேதத்தையும் ஏற்படுத்தாது. ஆனால், ஒரு சில நேரங்களில் காட்டை விட்டு வெளியேறும் வன விலங்குகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில், சிறுத்தை ஒன்று சாலையில் செல்லும் வாகனத்தின் மீது குதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : இப்படி ஒரு பக்தியா?.. பிறந்தநாள் கேக்கில் எரிந்த மெழுகு.. தலை குணிந்து கும்பிட்ட சிறுமி!

இணையத்தில் வைரலாகும் சிறுத்தையின் வீடியோ

நொடி பொழுதில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இரவு நேரத்தில் இருள் மிகுந்த சாலை ஒன்றில் சில வாகனங்கள் சென்றுக்கொண்டு இருக்கின்றன. அப்போது சாலையில் செல்லும் இருசக்கர வாகனத்தின் மீது திடீரென சிறுத்தை ஒன்று தாவி குதிக்கிறது. பிறகு பயத்தில் மீண்டு அந்த சிறுத்தை வந்த பாதையிலே ஓடுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். அதனை கண்டு பின்னால் சென்ற காரும் பிரேக் பிடித்து நிற்கிறது. இவை அனைத்தும் அந்த இரு சக்கர வாகனத்தின் பின்னால் சென்ற காரின் டேஷ் கேமில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.