Viral Video : திடீரென வானத்தில் தோன்றிய Shelf Cloud.. பயத்திலும், குழப்பத்திலும் ஆழ்ந்து போன பொதுமக்கள்!

Shelf Cloud in Washington | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான மற்றும் வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஷெல்ஃப் வடிவிலான மேகங்கள் உருவாகி பொதுமக்களை குழப்பத்திலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரல் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : திடீரென வானத்தில் தோன்றிய Shelf Cloud.. பயத்திலும், குழப்பத்திலும் ஆழ்ந்து போன பொதுமக்கள்!

வைரல் வீடியோ

Published: 

10 Jul 2025 18:26 PM

கடந்த சில நாட்களாகவே உலக நாடுகளில் வானத்தில் மிகவும் வித்தியாசமாக மேகங்கள் காட்சியளிப்பது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் தோன்றிய Shelf Cloud பொதுமக்களை பயத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், வாஷிங்டனில் தோன்றிய வித்தியாசமான மேகம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் தோன்றிய Shelf Cloud

உலகத்தின் எந்த மூலையில் வித்தியாசமான மற்றும் வியக்கத்தக்க சம்பவங்கள் நடைபெற்றாலும் அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகும். அந்த வகையில், அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் தோன்றிய ஷெல்ஃப்  வடிவிலான மேகத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் வித்தியாசமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் அதன் உருவம் காட்சியளிக்கிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு அடுக்கு மற்றும் தடுப்பு சுவர் போல மிக நீண்ட தூரத்திற்கு கரு மேகங்கள் திரண்டுள்ளது. அது பார்ப்பதற்கு மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. அவ்வாறு மிக நீண்ட தூரத்திற்கு திரண்டு இருந்த அந்த மேகங்கள் மெல்ல மெல்ல நகர்ந்ததாகவும் அதனை நேரில் பாத்தவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : உராங்குட்டானை புகை பிடிக்க வைத்த இளம் பெண்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

போர்ச்சுக்கலில் தோன்றிய சுனாமி அலை மேகங்கள்

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன் போர்ச்சுகலில் சுனாமி அலை போன்ற மேகங்கள் உருவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மேகங்கள் சரியாக கடற்கரையில் தோன்றிய நிலையில், அது பார்ப்பதற்கு கடலில் இருந்து ராட்சத சுனாமி அலைகள் உருவாகி கரையை நோக்கி வருவதை போல காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.