Viral Video : புலிக்கு மது கொடுத்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. உண்மையா?

Man Giving Alcohol to Tiger | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் மது போதையில் இருக்கும் நபர் ஒருவர் புலிக்கு மது கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Viral Video : புலிக்கு மது கொடுத்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. உண்மையா?

வைரல் வீடியோ

Published: 

30 Oct 2025 14:46 PM

 IST

சமூக ஊடகங்களில் உதவியால் ஒவ்வொரு நாளும் பல விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவற்றில் சில வீடியோக்கள் ஆச்சர்யமூட்டும் வகையிலும், சில வீடியோக்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில் மது போதையில் இருக்கும் நபர் ஒருவர் புலிக்கு மது குடிக்க கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ உண்மையானதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புலிக்கு மது கொடுத்த நபர்? – இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் நாள்தோறும் பல விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் மது போதையில் இருக்கும் நபர் ஒருவர் சாலையில் அமர்ந்திருக்கும் புலிக்கு மது குடிக்க குடிப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் பல விதமாக கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தால் உருவாக்கப்பட்டதா அல்லது உண்மையானதா என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : Viral Video : ரயில் கழிவறையை படுக்கை அறையாக மாற்றிய நபர்.. வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலை ஒன்றில் புலி ஒன்று படுத்துக்கொண்டு இருக்கிறது. அதன் அருகில் மது போதையில் நின்றுக்கொண்டு இருக்கும் நபர் ஒருவர் அந்த புலியை லேசாக வருடி விடுகிறார். பின்னர் தான் கையில் வைத்திருக்கும்  மது பாட்டிலை புலியின் வாயில் வைத்து அதனை குடிக்க வைக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : கடைசி நேரத்தில் வேலை செய்யாமல் போன யுபிஐ.. சமோசா விற்பவரிடம் சிக்கிய நபர்!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ள நபர் அதை தான் Grok ஏஐ மூலம் உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்டது என்பது உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.