Viral Video : விமானத்தில் லைஃப் ஜாக்கெட்டை திருடிய பயணி.. கையும் களவுமாக பிடித்த விமான ஊழியர்!

Passenger Caught Stealing Life Jacket | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். சில வீடியோக்கள் குற்ற சம்பவங்களை உலகிற்கு தெரியப்படுத்த முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில், பயணி ஒருவர் விமானத்தில் இருந்து லைஃப் ஜாக்கெட்டை திருட முயன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : விமானத்தில் லைஃப் ஜாக்கெட்டை திருடிய பயணி.. கையும் களவுமாக பிடித்த விமான ஊழியர்!

வைரல் வீடியோ

Published: 

27 Jun 2025 15:28 PM

விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் பயணத்தை முடித்து கீழே இறங்கும்போது, விமானத்தில் வழங்கப்பட்ட லைஃப் ஜாக்கட்டை (Life Jacket) எடுத்துச் செல்ல முயன்றதை விமான ஊழியர் கையும் களவுமாக பிடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம் பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விமானத்தில் இருந்து லைஃப் ஜேக்கட்டை திருட முயன்ற பயணி

விமானத்தில் பயணம் செய்யும் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக லைஃப் ஜாக்கெட் வழங்கப்படும். அதாவது எதிர்பாராத நேரங்களில் விமானம் தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளானால் அந்த லைஃப் ஜேக்கட் உயிரை காப்பாற்றும். இதன் காரணமாக அனைத்து விமானங்களிலும் லைஃப் ஜேக்கெட் வழங்கப்படும் நிலையில், பயணம் முடிந்த பிறகு பயணிகள் அவற்றை மீண்டும்  தங்களது இருக்கையிலே வைத்துவிட்டு செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படும்.

ஆனால், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட லைஃப் ஜாக்கெட்டை பயணம் முடிந்ததும் தனது பைக்குள் போட்டு எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், அதனை விமான ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், விமான ஊழியர் ஒருவர் லைஃப் ஜேக்கெட்டை திருட முயன்ற நபரை கையும், கலவுமாக பிடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

லைஃப் ஜேக்கட்டை திருட முயன்ற பயணி – கையும் களவுமாக பிடித்த ஊழியர்

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பயணம் முடிந்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறங்குகின்றனர். ஆனால், ஒரு பயணியை விமான ஊழியர் விசாரணை நடத்துகிறார். அப்போது அவரது பையை திறந்து பார்க்கும் ஊழியர் அதில் லைஃப் ஜாக்கெட் இருப்பதை கண்டு கோபமடைகிறார். அது குறித்து அவர் அந்த பயணியிடம் கேட்கும் நிலையில், அவர் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.