Viral Video : ரயில் கழிவறையை படுக்கை அறையாக மாற்றிய நபர்.. வைரலாகும் வீடியோ!
Man Turned Train Toilet into Bedroom | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ரயிலில் பயணம் செய்யும் ஒருவர் ரயில் கழிவறையை படுக்கை அறையாக மாற்றி பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான போக்குவரத்தாக ரயில்கள் உள்ளன. இதன் காரணமாக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அதன் விளைவாக ரயில்கள் எப்போதும் கூட்ட நெரிசல் மிக்கவையாக இருக்கின்றன. இந்த நிலையில், ரயிலில் பயணம் செய்த ஒருவர், ரயிலின் கழிவறையை படுக்கை அறையாக மாற்றி பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயில் கழிவறையை படுக்கை அறையாக மாற்றிய நபர்
ரயில்களில் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்ய முடியும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக ரயில்கள் எப்போது கூட்ட நெரிசல் மிக்கவையாக இருக்கும். அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களின் போது ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு ஏராளமான மக்கள் ரயிலில் பயணம் செய்த நிலையில், ஒருவர் ரயிலின் கழிவறையை படுக்கை அறையாக மாற்றி பயணம் செய்கிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : தீபாவளிக்கு சோன் பப்டி கொடுத்த நிறுவனம்.. ஆத்திரத்தில் வீசி சென்ற ஊழியர்கள்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவின் தொடக்கத்தில் இளைஞர் ஒருவர் பேசுகிறார். பிறகு அவர் தனது ஸ்மார்ட்போனின் கேமராவை திருப்பி காட்டுகிறார். அதில் ஒருவர் ரயிலின் கழிவறையை படுக்கை அறையாக மாற்றி இருப்பத்தை அவர் காட்டுகிறார். அந்த நபர் ரயிலின் கழிவறையில் மெத்தை போட்டு படுத்துக்கொண்டு இருக்கிறார். அந்த அறை சற்று நீளம் குறைவாக உள்ள நிலையில், அந்த நபர் கழிவறையின் வாஷ் பேஷின் மீது காலை நீட்டி படுத்துக்கொண்டு இருக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : பிளாஸ்டிக் குப்பை தொட்டியை உடைக்க போராடிய கரடி.. கியூட் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.