Viral Video : திருமண நிகழ்ச்சியில் மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை.. வைரல் வீடியோ!
Man Stole Bride's Handbag Which Has 4 Lakhs Worth Gold and Silver | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், திருமண நிகழ்ச்சியில் மணமகளின் பையை ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ
சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சில அசாத்தியமான மற்றும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த நபர் மொய் பணம் வைக்கப்பட்டு இருந்த பையை தூக்கிச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணின் பையை திருடிய நபர்
திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரும் கலந்துக்கொள்வர். இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களை கவனிப்பதிலேயே நேரம் போய்விடும். இந்த சூழலில் மணமகன், மணகளை சொல்லவா வேண்டும். வாழ்த்துக்களை வாங்கிக்கொண்டு நன்றி தெரிவிப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும். இத்தகைய பரபரப்பான சூழலில் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், திருமணத்திற்கு உறவினரை போல வருகை தந்த ஒருவர் மணப்பெண்ணின் பையையே திருடி சென்றுள்ளார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : சன் கேண்டில்.. சூரிய ஒளியில் மின்னிய பனி துகள்கள்.. ஆச்சர்யத்தை ஏற்படுத்திய வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் மேடையில் மணமக்கள் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, மேடை மீது பிளேசர் அணிந்த ஒருவர் ஏறுகிறார். அவர் திருமண வீட்டாரின் முக்கிய உறவினர் போல உடை அணிந்துள்ளார். பிளேசரை கையில் வைத்திருக்கும் அவர், மணமக்களுக்கு பின்னால் சென்று அவர்கள் அருகில் வைக்கப்பட்டு இருக்கும் பையை எடுத்து தனது பிளேசரில் மறைத்து வைத்துக்கொண்டு செல்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : ஒரே சிரிப்பில் பேமஸ்.. லாரி கிளீனர் டூ பிரபலம்.. யார் இந்த சிரிப்பு சிறுவன்?
இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வீடியோவை ஆதாரமாக வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். மர்ம நபர் திருடிச் சென்ற அந்த பையில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்க மற்றும் வெள்ளி நகைகள் இருந்ததாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.