Viral Video : வளர்ப்பு நாயை வைத்து சிறுவனை கடித்த வைத்த நபர்.. இணையத்தை கடுப்பாக்கிய வீடியோ!

Man Made Pit Bull Dog to Bite Child | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சிறுவன் ஒருவனை ஒருவர் பிட்புல் நாயை வைத்து கடிக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து பார்க்கலாம்.

Viral Video : வளர்ப்பு நாயை வைத்து சிறுவனை கடித்த வைத்த நபர்.. இணையத்தை கடுப்பாக்கிய வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

29 Jul 2025 22:28 PM

சமூக ஊடகங்களின் உதவி மற்றும் பரவலான ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக உலகின் எந்த மூலையில் ஏதேனும் அசாத்தியமான மற்றும் ஆச்சர்யமான சம்பவங்கள் நடைபெற்றாலும் அது மிக விரைவாக உலகிற்கு தெரிய வந்துவிடும். இவ்வாறு இணையத்தில் வைரலாகும் சில வீடியோக்கள் எவ்வாறு உண்ணதமான மனிதர்கள் உள்ளனர் என்பதை உணர்த்தும் விதமாக இருக்கும். ஆனால், சில வீடியோக்கள் மோசமான மனிதர்களின் முகங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும். அந்த வகையில், தனது வளர்ப்பு நாயை சிறுவனை கடிக்க வைக்கும் நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ப்பு நாயை வைத்து சிறுவனை கடிக்க வைத்த நபர்

சாலையில் விளையாடும் சிறுவர்களை வளர்ப்பு நாய்கள், தெரு நாய்கள் கடிப்பது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் நாயின் உரிமையாளர் வேண்டும் என்றே நாயை சிறுவனை கடிக்க வைக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : கழுத்து வரை கரை புரண்டு ஓடிய வெள்ளம்.. மூழ்கும் நிலையில் நேரலை செய்த செய்தியாளர்.. வைரல் வீடியோ!

மும்பையை சேர்ந்தவர் 11 வயதான ஹம்சா என்ற சிறுவன். இவர் சம்பவத்தன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோவில் ஏறி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அங்த ஆட்டோவில் பிட்புல் நாயுடன் ஏறிய நபர் ஒருவர் அந்த நாயை சிறுவனை கடிக்க வைத்துள்ளார். நாய் சிறுவனை கடிக்கும்போது அவர் சிரிக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் ஆட்டோ ரிக்‌ஷாவின் இருக்கைக்கு பின்னால் நின்றுக்கொண்டு இருக்கிறார். அப்போது அந்த நாயின் உரிமையாளர், நாயை சிறுவன் மீது அவிழ்துவிடுகிறார். நாயை பார்த்து சிறுவன் அலறும் நிலையில், அந்த நாயை சிறுவனை கடிக்க தொடங்குகிறது. அதனை பார்க்கும் அந்த நாயின் உரிமையாளர் சிரிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.