Viral Video : சிறுவனின் காதில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சியை எடுத்த மருத்துவர்.. ஷாக் வீடியோ!

Live Cockroach Removed from Boy's Ear | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் சிறுவனின் காதில் இருந்து மருத்துவர் ஒருவர் உயிருள்ள கரப்பான் பூச்சியை எடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : சிறுவனின் காதில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சியை எடுத்த மருத்துவர்.. ஷாக் வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

28 Oct 2025 21:35 PM

 IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடக்கும் சபவங்கள் குறித்து நமக்கு மிக எளிதில் தெரிய வரும். சில சம்பவங்கள் எடுத்துக்காட்டாகவும், அது போன்று நடந்துவிடாமல் பாதுகாப்பாக இருக்கவும் உதவும். அந்த வகையில், சிறுவனின் காதில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சி எடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் காதில் இருந்து கரப்பான் பூச்சியை எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுவனின் காதில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சியை எடுத்த மருத்துவர்

மனித உடலில் காது, மூக்கு, வாய் போன்ற பாகங்கள் மிக முக்கியமானவையாகவும், பாதுகாக்கப்பட வேண்டியவையாகவும் உள்ளன. காரணம் இந்த பகுதிகள் மூலம் வெளியே இருந்து உடலுக்குள் கிருமிகள், சிறிய வகை பூச்சிகள் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பாகங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், கம்போடியாவை சேர்ந்த சிறுவனின் காதில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சி எடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மனது இளமையாகவே உள்ளது.. 83 வயதில் பஞ்சி ஜம்பிங் செய்த மூதாட்டி.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சிறுவன் ஒருவர் நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு அருகில் மருத்துவர் ஒருவர் அமர்ந்துக்கொண்டு சிறிய கேமாரா ஒன்றை சிறுவனின் காதில் நுழைத்து சோதனை செய்கிறார். அப்போது சிறுவனின் காதில் உயிருள்ள கரப்பான் பூச்சி நெளிந்துக்கொண்டு இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைகிறார். பின்னர் உருஞ்சி எடுக்கும் கருவி மூலம்  மருத்துவர் அந்த சிறுவனின் காதில் இருந்து கரப்பான் பூச்சியை வெளியே எடுக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ரயில் டிக்கெட்டுக்கு பதில் ஆதார் கார்டை காண்பித்த மூதாட்டி.. TTE செய்த செயல்!

இரவில் தூங்கிக்கொண்டு இருந்தபோது வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி சிறுவனின் காதுக்குள் நுழைந்திருக்கலாம் என மருத்துவர் சந்தேகித்த நிலையில், வீட்டை தூய்மையாக வைத்துள்ள சிறுவனின் தாய்க்கு மருத்துவர் அறிவுரை வழங்கியுள்ளார்.