Viral Video : கோயிலை காவல் காத்த சிங்கம்?.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!

Lion at Hindu Temple | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் சிங்கம் ஒன்று ஒரு இந்து கோயில் முன்பு அமர்ந்துக்கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : கோயிலை காவல் காத்த சிங்கம்?.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

29 Sep 2025 23:39 PM

 IST

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அவற்றில் சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை ஏறபடுத்தும் விதமாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதாமகவும் இருக்கும். அந்த வகையில், கோயில் ஒன்றின் வெளியே சிங்கம் ஒன்று அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோயிலை காவல் காத்த சிங்கம்?

வனப்பகுதிகளில் இருந்து சிங்கங்கள் வெளியே வந்து குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிவது தொடர்பான வீடியோக்கள் சில அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் சிங்கம் ஒன்று இந்து கோயிலின் வெளியே அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பலரையும் ஆச்சர்யமூட்டும் விதமாக அமைந்துள்ளதால் பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : பாங்காக்கில் ஏற்பட்ட திடீர் ராட்சத பள்ளம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இந்து கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயிலின் வெளியே சிங்கம் ஒன்று அமர்ந்துக்கொண்டு இருக்கிறது. அதாவது அந்த சிங்கம் கோயிலை பார்த்தவாறு அமர்ந்துக்கொண்டு இருக்கிறது. அதனை பார்ப்பதற்கு சிங்கம் அந்த கோயிலை காவல் காத்துக்கொண்டு இருப்பதை போல தோன்றுகிறது. இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வனத்துறை அதிகாரி ஒருவர், அந்த வீடியோ பார்ப்பதற்கு சிங்கம் கோயிலை பாதுகாத்துக்கொண்டு இருப்பதை போல உள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : ரகசியமாக புகைப்படம் எடுத்த நபர்.. தைரியமாக தட்டிக் கேட்ட பெண்.. குவியும் பாராட்டு!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் கடவுள் பக்தியுடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிலரோ சிங்கம் பொதுவெளியில் இருப்பது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர்.