Viral Video : பெல்ஜியம் சாலையில் களைக்கட்டிய கர்பா நடனம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Foreigners Performs Gujarat's Famous Garba Dance | நவராத்திர் கொண்டாட்டங்களின்போது கர்பா நடனமாடப்படும் நிலையில், பெல்ஜியத்தில் சில வெளிநாட்டவர்வர்கள் ஒன்றுகூடிய கர்பா நடனமாடுகின்றனர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

வைரல் வீடியோ
இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தின் மீது வெளிநாட்டவர்கள் எப்போதுமே ஈர்ப்பு இருக்கும். இதன் காரணமாக உலகம் எங்கிலும் இருக்கும் வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவர். அவ்வாறு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் இந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம் ஆகியவை குறித்து மிகவும் ஆர்வமுடன் கவனிப்பர். இந்திய கலைகளை காண வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வந்த காலம் மாறி, வெளிநாட்டவர்களே இந்திய கலைகளை பின்பற்ற தொடங்கிவிட்டனர். அந்த வகையில் ஏராளமான வெளிநாட்டவர்கள் ஒன்று கூடி இந்தியாவின் பாரம்பரியங்களில் ஒன்றான கர்பா நடனத்தை ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெல்ஜியத்தில் கர்பா நடனமாடிய வெளிநாட்டவர்கள்
இந்தியாவில் நவராத்திரி பண்டிகை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பண்டிகை இந்தியாவின் பல பகுதிகளில் மிக விமரிசையாக கொண்டாடப்படும். 9 நாட்களும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கொளு வைத்து வழிபடுவர். நவராத்திரி பண்டிகையின் சிறப்பாக குஜராத்தில் கர்பா நடனமாடப்படும். குரஜாத்தின் பாரம்பரியமான இது உலகம் முழுவதும் பரவியுள்ளது. அந்த வகையில் பெல்ஜியத்தில் வெளிநாட்டவர்கள் இணைந்து கர்பா நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
The devotion to Mata Rani knows no borders!
In Belgium, people are coming together to perform Garba during this Navratri. 🙏 pic.twitter.com/6RmomNlRuO
— Akanksha Parmar (@iAkankshaP) September 22, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெல்ஜியத்தின் சாலையில் சில வெளிநாட்டவர்கள் குஜராத்தின் பாரம்பரிய நடனமான கர்பா நடனமாடுகின்றனர். அதில் சில பெண்கள் கர்பா நடனமாடுவதற்கான பாரம்பரிய உடை அணிந்திருக்கின்றனர். மற்றவர்கள் வழக்கமான உடைகளை அணிந்துக்கொண்டு மிகவும் உற்சாகமாக நடனமாடுகிறார். அந்த நடனத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். அவர்களை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : தொண்டையில் சிக்கிய சுவிங் கம்.. விரைந்து செயல்பட்டு சிறுமியை காப்பாற்றிய இளைஞர்கள்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இந்திய கலாச்சார நடனம் பெல்ஜியம் வரை சென்றது குறித்து பலரும் மகிழ்ச்சியுடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.