Viral Video : ரயில் டிக்கெட்டுக்கு பதில் ஆதார் கார்டை காண்பித்த மூதாட்டி.. TTE செய்த செயல்!
Elderly Woman Shows Aadhar Instead Train Ticket | ரயிலில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர் டிக்கெட் பரிசோதகர் வந்து டிக்கெட் கேட்டபோது டிக்கெட்டுக்கு பதிலாக ஆதார் கார்டை காட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் உதவியால் நம்மை சுற்றி, உலகம் முழுவது நடைபெறும் சில சுவாரஸ்யமான மற்றும் அழகான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ரயிலில் டிக்கெட் பரிசோதகர் மூதாட்டியிடம் டிக்கெட் பரிசோதனை செய்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக ஆதார் அட்டையை காட்டிய மூதாட்டி
ரயில்களில் பயணம் செய்யும்போது டிக்கெட் எடுக்க வேண்டியது கட்டாயம். அவ்வாறு பயணிகள் அனைவரும் டிக்கெட் எடுத்துள்ளனரா என்பதனை சோதனை செய்ய ரயில் பெட்டிகளில் ரயில் பரிசோதகர்கள் சோதனை மேற்கொள்வர். அந்த வகையில், ரயில் பரிசோதகர் ஒருவர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டபோது மூதாட்டி ஒருவரிடம் டிக்கெட் கேட்ட நிலையில், அதற்கு அவர் ஆதார் அட்டையை எடுத்து காட்டியுள்ளார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : ஜெர்மனியை விட இந்தியாவில் இத்தனை சிறப்புகள் உள்ளன.. வெளிநாட்டு பெண் வெளியிட்ட வீடியோ வைரல்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
दादी माँ ने टिकट की जगह आधार कार्ड दिखाया और भाई मान भी गया,भाई ने दिल जीत लिया।।
दादी के लिए एक ❤️ और भाई के लिए Rt🔁 तो बनती हैं pic.twitter.com/rEwu6YcnxZ
— Vandana Meena (@vannumeena0) October 9, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ரயில் பயணம் செய்யும் ஒரு மூதாட்டியிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்கிறார். அதற்கு அந்த மூதாட்டி தனது பையில் இருந்து ஆதார் கார்டை எடுத்து நீட்டுகிறார். அதற்கு அந்த பரிசோதகர் ஏதோ ஒன்று கூற, அந்த மூதாட்டி பதிலை கேட்டு அவர் சிறிக்கிறார். மூதாட்டி ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தாலும், அந்த டிக்கெட் பரிசோதகர் மூதாட்டி மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : சோயா பீன்ஸ் உருளை இடிந்து விழுந்து விபத்து.. நொடி பொழுதில் உயிர் தப்பிய ஊழியர்கள்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், ரயில் டிக்கெட் பரிசோதகரின் நல்ல உள்ளத்தை பாராட்டி பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.