Viral Video : பிளாஸ்டிக் குப்பை தொட்டியை உடைக்க போராடிய கரடி.. கியூட் வீடியோ!
Bear Tried to Break Trash Can | காட்டுக்குள் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழையும் விலங்குகள் அட்டகாசம் செய்யும். அந்த வகையில், கரடி ஒன்று சாலையில் இருந்த பிளாஸ்டிக் குப்பை தொட்டியை உடைக்க முயற்சி செய்யும் வீடியோ வைரல்.

வைரல் வீடியோ
விலங்குகள் செய்யும் குறும்பு தனம் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பல வீடியோக்கள் மிக அழகாகவும், பல வீடியோக்கள் வியப்பூட்டும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில் கரடி ஒன்று குப்பை தொட்டியை உடைக்க முயற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிளாஸ்டிக் குப்பை தொட்டியை உடைக்க போராடிய கரடி
காட்டுக்குள் இருக்கும் கரடிகள் வெளியே பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்தால் அவை வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் செலுத்தும். சில நேரங்களில் சாலையில் இருக்கும் பொருட்கள், வாகனங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தும். அந்த வகையில், அலஸ்காவில் காட்டில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி ஒன்று அங்கு சாலையில் இருந்த குப்பை தொட்டியை உடைக்க முயற்சி செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : ஆபத்திலும் இணைபிரியாத காதல்.. இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ