Viral Video : ரகசியமாக புகைப்படம் எடுத்த நபர்.. தைரியமாக தட்டிக் கேட்ட பெண்.. குவியும் பாராட்டு!
Woman Questions Man Who Filmed Her | பொது இடங்களில் பெண்களை செல்போனில் படம் பிடிப்பதை சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் தன்னை படம் பிடித்த நபரை பெண் ஒருவர் தட்டிக் கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் சுதந்திரமாக தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு பயணம் செய்கின்றனர். ஆனால், அவ்வாறு தனியாக பயணம் செய்யும் பெண்கள் பல இடங்களில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகின்றனர். அந்த வகையில் தன்னை ரகசியமாக படம் பிடித்த நபரை அமெரிக்க பெண் ஒருவர் தட்டி கேட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் பலரும் அந்த பெண்ணின் துணிச்சலை பாராட்டி கருத்து பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ