Viral Video : மரத்தின் மீது ஏறிய ராட்சத அனகோண்டா.. இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!
Video of Massive Anaconda Goes Viral on Internet | அனகோண்டா பாம்புகள் மிகவும் அரிதானவை. பெரும்பாலான இடங்களில் அவற்றை பார்ப்பதற்கு வாய்ப்பு குறைவு. நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் தான் அனகோண்டா பாம்புகள் வாழும். இந்த நிலையில் ஆப்ரிக்கா காட்டில் படம்பிடிக்கப்பட்ட ராட்ச அனகோண்டாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
உலகில் மிகப்பெரிய பாம்பு வகையாக உள்ளது அனகோண்டா (Anaconda). இந்த பெரிய வகை அனகோண்டாக்கள் நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழும். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை அனகோண்டா பாம்புகள் மிகவும் அரிதாக காணப்படுகின்றன. ஆனால், மேற்கத்திய நாடுகளில் இந்த வகை பாம்புகள் அதிகள் உள்ளன. குறிப்பாக சதுப்புநில பகுதியாக கருதப்படும் புளோரிடாவில் (Florida) பெரிய வகை அனகோண்டாக்கள் அதிகம் வாழுகின்றன. இந்த நிலையில், ஆப்ரிக்காவின் காட்டு பகுதியில் மிகப்பெரிய அளவிலான அனகோண்டா பாம்பு ஒன்று மரத்தின் மீது ஏறும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்கா காட்டில் மரத்தின் மீது ஏறிய ராட்சத அனகோண்டா
அனகோண்டா பாம்புகள் என்றாலே பெரும்பாலான மக்களுக்கு மனதில் அச்சம் வந்துவிடும். காரணம், அவை பார்ப்பதற்கு மிகப்பெரிய தோற்றம் கொண்டிருக்கும். அதுமட்டுமன்றி, ஒரு மனிதரையே விழுங்கும் அளவுக்கு சக்தி கொண்டவை தான் இந்த அனகோண்ட பாம்புகள். இவ்வாறு மிகவும் அச்சுறுத்தும் தோற்றமும், திறனும் கொண்ட அனகோண்டா பாம்பின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஆப்ரிக்காவின் காட்டில் எடுகப்பட்டதாக கூறப்படுகிறது.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ராட்சத உருவம் கொண்ட அனகோண்டா ஒன்று ஒரு மரத்தின் மீது ஏறுகிறது. அது பார்ப்பதற்கே மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. அந்த பாம்பு தோறாயமாக சுமார் 100-க்கும் மேல் எடை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அந்த பாம்பு 15 முதல் 20 அடி நீளம் கொண்டதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இவ்வளவு பெரிய அனகோண்டாவை திரைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இது உண்மையான அனகோண்டா என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.