Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் பாடல்களை ஆட் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

WhatsApp Status Music Feature | வாட்ஸ்அப் செயலியில், ஸ்டேட்டசுக்கு பாடல் சேர்க்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் பாடல்களை ஆட் செய்யலாம்.. எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 28 Mar 2025 18:44 PM

உலகம் தொழில்நுட்ப ளர்ச்சியில் (Technology Development) மிக வேகமாக முன்னேறி வரும் நிலையில், தகவல் பரிமாற்றம் (Communication) மிகவும் எளியதாக மாறிவிட்டது. தற்போதுள்ள தகவல் பரிமாற்ற அம்சத்தை பயன்படுத்தி மிக எளிதாக, நொடி பொழுதில் ஒருவர் மற்றொருவரை தொடர்புக்கொள்ளலாம். அந்த வகையில், தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் முக்கிய செயலிகளில் ஒன்றாக உள்ளது தான் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி.

வாட்ஸ்அப்பில் வந்த புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தகவல் பரிமாற்றத்திற்கான பயன்படுத்துகின்றனர். தகவல பரிமாற்றத்திற்கு மட்டுமன்றி, பொழுதுபோக்கிற்கும் வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் காரண்மாக உலக அளவில் இதற்கு பயனர்கள் அதிகம் உள்ளனர். ஏற்கனவே இருக்கும் பயனர்களின் நலனுக்காகவும், புதிய பயனர்களை தன்வசம் இழுப்பதற்காகவும் வாட்ஸ்அப் அவ்வப்போது பல புதிய அப்டேட்களை அறிவிக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு அசத்தலான அம்சம் தான், வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் (WhatsApp Status) பாடல்களை சேர்க்கும் வசதியாகும். இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியில் உள்ளதை போலவே பாடலை சேர்க்கும் அம்சம், வாட்ஸ்அப்பிலும் கொண்டுவரபடுமா என பயனர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், இந்த அம்சத்தை அறிமுகம் செய்து பயனர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது வாட்ஸ்அப்.

தொடர் அப்டேட்டுகளை வெளியிட்டு வரும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் கடந்த சில நாட்களாகவே பல வகையான சிறப்பு அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது, உரையாடல்களை சுவாரஸ்யமானதாக மாற்றுவதற்கான சாட் தீம், குரல் பதிவுகளை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிர்வது உள்ளிட்ட பல அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தான் தற்போது ஸ்டேட்டசில் பாடல்களை சேர்க்கும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

முன்னதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் பாடல்களை சேர்ப்பதற்கு பயனர்கள் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது, செயலிகளை பயன்படுத்தி எடிட் செய்வது உள்ளிட்ட செயல்களை செய்வர். இந்த நிலையில் தான், பயனர்களின் சுமையை குறைக்கும் வகையில் வாட்ஸ்அப் இந்த பயனுள்ள அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது முதலே ஏராளமான பயனர்கள் அதனை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் பாடல்களை சேர்ப்பது எப்படி?

  1. அதற்கு முதலில் வாட்ஸ்அப் செயலிக்குள் செல்ல வேண்டும்.
  2. அதில் ஆட் டூ ஸ்டேட்டஸ் (Add to Status) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  3. பிறகு நீங்கள் எந்த புகைப்படத்தை ஸ்டேட்டசாக பதிவிட விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  4. பின்னர் புகைப்படத்தின் மேலே கொடுக்கப்பட்டுள்ள இசை சின்னத்தை (Music Symbol) கிளிக் செய்து, பாடலை தேர்வு செய்யவும்.
  5. பாடல்களின் பெயர் அல்லது பாடகரின் பெயரை பதிவிட்டு பாடல்களை தேடலாம்.
  6. பாடல்களை புகைப்படத்துடன் இணைப்பதற்கு முன்பாக அதனை பிளே செய்து நீங்கள் தேடிய பாடல் இதுதானா என்பதனை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
  7. பின்னர் அந்த பாடலில் கொடுக்கப்பட்டு இருக்கும் அம்பு குறியை (Arrow) கிளிக் செய்து பாடலை உறுதி செய்யுங்கள்.
  8. பின்னர் மேலே கொடுக்கப்பட்டு இருக்கும் டன் (Done) என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் புகைப்படத்துடன் பாடல் இணைக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் புகைப்படங்களுக்கு பாடல்களை சேர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

benefits of walking : சாப்பிட்டவுடன் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?
benefits of walking : சாப்பிட்டவுடன் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?...
சிறுநீரகங்கள் செயலிழப்பதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
சிறுநீரகங்கள் செயலிழப்பதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன?...
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பிரச்னையா இருக
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பிரச்னையா இருக...
அதிகமாக டீ குடிப்பீங்களா? அப்போ இந்த பிரச்னை ஏற்படலாம்!
அதிகமாக டீ குடிப்பீங்களா? அப்போ இந்த பிரச்னை ஏற்படலாம்!...
டையபடிக் ஷாக் பற்றி தெரியுமா? அதன் அறிகுறிகள் என்ன ?
டையபடிக் ஷாக் பற்றி தெரியுமா? அதன் அறிகுறிகள் என்ன ?...
அரக்கோணம்: துப்பாக்கி வைத்திருந்ததாக திமுக மன்ற உறுப்பினர் கைது.!
அரக்கோணம்: துப்பாக்கி வைத்திருந்ததாக திமுக மன்ற உறுப்பினர் கைது.!...
சிம்புவின் டைட்டில் கார்டு வீடியோவை வெளியிட்ட தக் லைஃப் படக்குழு!
சிம்புவின் டைட்டில் கார்டு வீடியோவை வெளியிட்ட தக் லைஃப் படக்குழு!...
ரிஷபம் ராசியில் புதன்... தொட்டதெல்லாம் வெற்றி பெறும் 6 ராசிகள்!
ரிஷபம் ராசியில் புதன்... தொட்டதெல்லாம் வெற்றி பெறும் 6 ராசிகள்!...
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?...
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்கலாமா?
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்கலாமா?...
திரும்ப வருவேனா? வரமாட்டேனா..? ஓய்வு குறித்து தோனி ஜாலி பதில்!
திரும்ப வருவேனா? வரமாட்டேனா..? ஓய்வு குறித்து தோனி ஜாலி பதில்!...