Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெருங்கும் கோடை காலம்: ஏசி வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் முதல் அக்டோபர் 2025 வரை கடுமையான வெப்பம் நிலவும். புதிய ஏசி வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் சில முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் பின்னர் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

நெருங்கும் கோடை காலம்: ஏசி வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!
ஏசி வாங்க டிப்ஸ்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 29 Mar 2025 04:14 AM

தொலைக்காட்சிகளில் ஏசி சார்ந்த விளம்பரங்கள் வரத் தொடங்கினால் கோடை காலம் நெருங்குகிறது என அர்த்தம். ஏப்ரல் மாதம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் (Heat Waves) அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடைகாலத்தில் வெப்பத்தின் பாதிப்பு அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வும் மையம் எச்சரித்திருக்கிறது. இதனை முன்னிட்டு ஏசி பயன்பாடு அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் (India) பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல முதல் அக்டோபர் 2025 வரை கடுமையான வெப்பம் நிலவும். புதிய ஏசி வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் சில முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் பின்னர் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

சரியான வயரிங் மிக அவசியம்

ஏசியை பாதுகாப்பாக இயக்க உங்கள் வீட்டில் உயர் மின்னழுத்த வயரிங் இருக்க வேண்டும். போதிய மின்சார இணைப்பு இல்லையெனில், அதிக வெப்பத்தின் காரணமாக வயர் இணைப்புகளில் பாதிப்பு அல்லது தீ விபத்து போன்ற அபாயங்களை ஏற்படுத்தலாம்.ஏசி பொருத்துவதற்கு முன்பு உங்கள் வீட்டில் உயர் மின்னழுத்த இணைப்பு மற்றும் குறைந்தது 2KW மின்சார இணைப்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில், மின்சார வாரியத்திலிருந்து அபராதம் விதிக்கப்படும் அபாயம் உள்ளது.

உங்கள் அறைக்கு சரியான ஏசி தேர்வு செய்வது எப்படி?

ஏசி வாங்கும் முன் உங்கள் அறையின் அளவை கவனிப்பது அவசியம். உங்கள் அறை சிறியது என்றால் 1 டன் ஏசி போதுமானது. பெரிய அறை என்றால் 1.5 டன் முதல் 2 டன் வரை தேவைப்படும். மேலும், உங்கள் அறையில் விண்டோ ஏசி பொருத்த இடமில்லையெனில், ஸ்பிலிட் ஏசி மட்டுமே ஒரே தேர்வாக இருக்க முடியும். அதற்காக பால்கனி அல்லது முறையான காற்றோட்ட வசதி உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்வெர்டர் ஏசிகள் மின்சாரத்தை அதிகம் சேமிக்க உதவும். தொடர்ச்சியாக பயன்படுத்த போகிறீர்கள் என்றால், இன்வெர்டர் ஏசி சிறந்த தேர்வு.

ஏசி தேர்வு செய்யும்போது உங்கள் பட்ஜெட் மகி முக்கியமானதாகும். மின்சார கட்டணத்தை குறைக்க விரும்பினால், 5 ஸ்டார் ஏசி வாங்குவது நல்ல தேர்வாகும். இது குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும். ஆனால் உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால் குறைந்த ரேட்டிங் கொண்ட ஏசியை வாங்கிக் கொள்ளலாம்.

அதிக வருட உத்தரவாதம் மற்றும் ஏசி பிராண்டின் சேவை மையங்கள் அருகில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். ஸ்டெபிளைசர் தேவைப்படுமா என்பதை உறுதிப்படுத்தவும். குறைந்த மாசுபாடு ஏற்படுத்தும் ரெபிரிஜரென்ட் பயன்படுத்தும் ஏசி தேர்வு செய்யலாம். பிஇஎல்  (BEE) ஸ்டார் ரேட்டிங், ஐஎஸ்ஐ (ISI) சான்றிதழ் பெற்ற ஏசிகளை தேர்வு செய்வது பாதுகாப்பான மற்றும் நீண்ட ஆயுளுக்கு உதவும்.

நீண்ட கால செயல்பாடுக்கு தவறாமல் பராமரிப்பு செய்தவது அவசியம்

ஏசி பொருத்துவது முதல் படி மட்டுமே. அதை நீண்ட காலம் சிறப்பாக பயன்படுத்த, தற்போதைய பராமரிப்பு அவசியம். இல்லையெனில், கம்ப்ரசர் அதிக வேலைப்பளு அடைந்து கொண்டுபோவது, அதிக வெப்பத்தினால் பாதிப்பு ஏற்படுவது மற்றும் ஏசியின் ஆயுட்காலம் குறைவது போன்ற பிரச்சினைகளை உருவாக்கலாம். பராமரிப்பு செய்யத் தவறினால், பழுதுக்காக செலவுகள் அதிகரிக்கும். மேலும் ஆபத்துகளையும் ஏற்படுத்தும். இதனை கருத்தில் கொண்டு ஏசி வாங்கும் முன் முறையாக ஆய்வு செய்து, உங்கள் தேவைக்கு ஏற்ற தேர்வை செய்யுங்கள்.

benefits of walking : சாப்பிட்டவுடன் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?
benefits of walking : சாப்பிட்டவுடன் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?...
சிறுநீரகங்கள் செயலிழப்பதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
சிறுநீரகங்கள் செயலிழப்பதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன?...
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பிரச்னையா இருக
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பிரச்னையா இருக...
அதிகமாக டீ குடிப்பீங்களா? அப்போ இந்த பிரச்னை ஏற்படலாம்!
அதிகமாக டீ குடிப்பீங்களா? அப்போ இந்த பிரச்னை ஏற்படலாம்!...
டையபடிக் ஷாக் பற்றி தெரியுமா? அதன் அறிகுறிகள் என்ன ?
டையபடிக் ஷாக் பற்றி தெரியுமா? அதன் அறிகுறிகள் என்ன ?...
அரக்கோணம்: துப்பாக்கி வைத்திருந்ததாக திமுக மன்ற உறுப்பினர் கைது.!
அரக்கோணம்: துப்பாக்கி வைத்திருந்ததாக திமுக மன்ற உறுப்பினர் கைது.!...
சிம்புவின் டைட்டில் கார்டு வீடியோவை வெளியிட்ட தக் லைஃப் படக்குழு!
சிம்புவின் டைட்டில் கார்டு வீடியோவை வெளியிட்ட தக் லைஃப் படக்குழு!...
ரிஷபம் ராசியில் புதன்... தொட்டதெல்லாம் வெற்றி பெறும் 6 ராசிகள்!
ரிஷபம் ராசியில் புதன்... தொட்டதெல்லாம் வெற்றி பெறும் 6 ராசிகள்!...
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?...
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்கலாமா?
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்கலாமா?...
திரும்ப வருவேனா? வரமாட்டேனா..? ஓய்வு குறித்து தோனி ஜாலி பதில்!
திரும்ப வருவேனா? வரமாட்டேனா..? ஓய்வு குறித்து தோனி ஜாலி பதில்!...