பிஎஸ்என்எல்-ன் புதிய அறிவிப்பு – 160 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 2GB டேட்டா வழங்கும் பிளான் – எவ்வளவு தெரியுமா?
பிஎஸ்என்எல் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களின் வேலிடிட்டி அதிகம் என்பதால் இது மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதிக செலவில்லாமல் நீண்ட காலம் வரை பயன்படுத்தும் வசதி இதன் முக்கிய சிறப்பு. மற்ற நெட்வொர்ககுகள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதுடன் வேலிடிட்டி அளவையும் வெகுவாக குறைத்திருக்கிறது.

கடந்த சில மாதங்களில், அரசிற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்(BSNL) புதிய பயனர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க, பல பயனுள்ள சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. 4ஜி (4G) அறிமுகத்துக்கு பிறகு அதன் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. பெரும்பாலானோர் மீண்டும் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில் அதிக கட்டணமுள்ள ரீசார்ஜ் (Recharge) திட்டங்களின் சுமையை குறைக்க, கடந்த சில மாதங்களில் பல மலிவு திட்டங்களை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது. நீங்கள் இரண்டாம் சிம் கார்டாக பிஎஸ்என்எல் பயன்படுத்தினால், இதன் சிறப்பான திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக் கூடும்.
பிஎஸ்என்எல் வழங்கும் சிறந்த ஆஃபர்கள்
பிஎஸ்என்எல் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களின் வேலிடிட்டி அதிகம் என்பதால் இது மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதிக செலவில்லாமல் நீண்ட காலம் வரை பயன்படுத்தும் வசதி இதன் முக்கிய சிறப்பு. மற்ற நெட்வொர்ககுகள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதுடன் வேலிடிட்டி அளவையும் வெகுவாக குறைத்திருக்கிறது. தற்போது பிஎஸ்என்எல்-ன் இந்த புதிய அறிவிப்பால் மேலும் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-க்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தின் சிறப்புகள்:
160 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பதால் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் தொந்தரவைத் தவிர்க்கலாம்.
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்புகள் – முழு 160 நாட்களும் எந்த கட்டணமும் இல்லாமல் அழைக்கலாம்.
தினசரி 100 இலவச SMS – குறுஞ்செய்திகளை அனுப்ப எளிதான விருப்பம்.
மொத்தம் 320GB வரை அதிவேக நெட் பயன்பாடு – தினசரி 2ஜிபி வரை பயன்படுத்தலாம்.
பிஎஸ்என்எல் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த திட்டத்தின் நன்மைகளை பகிர்ந்து கொண்டுள்ளது. “முடியாத உரையாடல்கள், முடிவில்லா டேட்டா மற்றும் அதிக வேலிடிட்டி! 160 நாட்கள் தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு தயாராகுங்கள்!” என்று பிஎஸ்என்எல் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
ஏர்டெல்லின் ரூ. 999 திட்டம்
- வேலிடிட்டி 84 நாட்கள் மட்டுமே.
-
தினமும் 2.5GB டேட்டா (மொத்தம் 210GB).
-
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்புகள்.
-
100 SMS/நாள்.
-
Airtel Xstream & Wynk Music Subscription சேர்த்து வழங்கப்படுகிறது.
ஜியோவின் ரூ. 999 திட்டம்
-
வேலிடிட்டி 84 நாட்கள் மட்டுமே.
-
தினமும் 3GB டேட்டா (மொத்தம் 252GB).
-
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்புகள்.
-
100 SMS/நாள்.
-
ஜியோ டிவி, ஜியோ சினிமா உள்ளிட்ட சில ஓடிடி சேவைகள்
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய விதிமுறைகளை அறிவித்திருந்தது. இந்த வழிகாட்டுதல்கள் டிசம்பர் 24, 2024 அன்று வெளியிடப்பட்டன. அதன் படி, ஏர்டெல், ஜியோ, வோடாபோன் ஐடியா (Vi), பி.எஸ்.என்.எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 முதல் தொடங்கும் சிறப்பு கட்டண வவுச்சர்களை வழங்க வேண்டும். இந்த திட்டங்கள், குறிப்பாக 2ஜி பயனர்களுக்கு, ஒரு வருடம் வரை செல்லுபடியாகும் சேவைகளை வழங்க வேண்டும். அதாவது 90 நாட்களுக்குப் பதிலாக 365 நாட்கள் வரை செல்லுபடியாகும் திட்டங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். இது 2ஜி பயனர்களுக்கு நீண்ட காலம் வேலிடிட்டிக்காக, குறைந்த செலவில் ரீசார்ஜ் செய்யும் வசதியை வழங்கும். இதற்கு முன்பாக பயனர்கள் குரல் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை மட்டுமே பயன்படுத்தினாலும், இண்டர்நெட் டேட்டா சேர்க்கப்பட்ட திட்டங்களுக்கும் சேர்த்து ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் இந்த புதிய மாற்றம் அதற்கான செலவை குறைக்கும்.