Google Photos : கூகுள் போட்டோசில் தேவையற்ற முகங்களை நீக்கலாம்.. எப்படி தெரியுமா?
Hide Unwanted Faces in Google Photos | ஜிமெயில் கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள் போட்டோஸ் செயலியில் பல ஆண்டுகளுக்கான புகைப்படங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த நிலையில், கூகுள் போட்டோசில் இருந்து தேவையற்ற முகங்களை நீக்குவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன்களின் (Smartphone) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு வயது குழந்தை முதல் 90 வயது முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் தங்களது அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சிறு குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது முதல், தகவல் பரிமாற்றம் (Communication), பொழுதுபோக்கு (Entertainment), பண பரிவர்த்தனை (Money Transaction), பொருட்களை வாங்குவது உள்ளிட்ட பல தேவைகளுக்காக பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர்.
ஸ்மார்ட்போன்கள் மூகல் புகைப்படம் எடுத்து நினைவுகளை சேமிக்கும் பொதுமக்கள்
பொதுமக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த இதை எல்லாம் விட முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதுதான் புகைப்படம், பெரும்பாலான மக்கள் நல்ல புகைப்படம் எடுப்பதற்காகவே ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். குறிப்பாக ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு முன்பாக அதன் கேமரா தரத்தை முதன்மையா சோதிக்கின்றனர். தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடன் புகைப்படம் எடுப்பது, சுற்றுலா செல்லும்போது புகைப்படம் எடுப்பது, தங்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்வுகள், இடங்கள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து வைப்பது என புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
அன்புக்குறியவர்களின் புகைப்படங்கள்
ஸ்மார்ட்போன்கள் மூலம் எத்தனை புகைப்படங்கள் எடுத்தாலும் நமது அன்புக்குறியவர்கள் உடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களுக்கு இணையாகாது. காதலன், காதலி, அண்ணன், தங்கை, தாய், தந்தை, கணவன், மனைவி என பலரும் தங்களது அன்புக்குறியவர்களுடன் புகைப்படங்களை எடுத்து அதனை மிகவும் பத்திரிமாக சேகரித்து வைக்கின்றனர். காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதன் காரணமாக அன்புக்குறியவர்கள் அதிக வெறுப்புக்குரிய நபர்களாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
சிலர் என்னதான் உறவில் விரிசல் ஏற்பட்டாலும், தாங்கள் நேசித்த நபர்களின் புகைப்படங்களை நினைவுகளாக சேமிக்க விரும்புவர். ஆனால் சிலரோ, அந்த நபர்களின் புகைப்படத்தை கூட பார்க்க விரும்பாத நபர்களாக மாறிவிடுகின்றனர். ஆனால் அவர்களின் புகைப்படத்தை அழிக்க விரும்பாத நபர்களாகவும் உள்ளனர். இத்தகையவர்களுக்கு தான் கூகுள் போட்டோசில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. அதனை பயன்படுத்தி வேண்டாத அந்த ஒரு நபரின் புகைப்படத்தை மட்டும் மறைத்துக்கொள்ளலாம்.
தேவையற்ற முகங்களை கூகுள் போட்டோசில் இருந்து நீக்குவது எப்படி?
- இதற்கு முதலில் கூகுள் போட்டோஸ் (Google Photos) செயலிக்கு செல்ல வேண்டும்.
- அங்கு மெமரீஸ் (Memories) என்ற டேபை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு நீங்கள் யாருடைய முகத்தை மறைக்க விரும்புகிறீர்களோ அவர்களது முகத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- அந்த முகத்தின் மீது ஒரு கிளிக் செய்து மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவை (Menu) கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் இருக்கும் Hide Face From Memories என்ற ஆப்ஷனை கிளிக் செய்து முகத்தை மறைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி மிக எளிதாக கூகுள் போட்டோசில் இருந்து தேவையற்ற முகங்களை நீக்கிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.