கூகுள் மேப்பில் உள்ள நிறங்களின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

Google Maps Guide : கூகுள் மேப் இன்று இந்திய பயணிகளுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய துணையாக மாறியிருக்கிறது. இதில் காணப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம், ஊதா, பழுப்பு போன்ற நிறங்கள் ஒவ்வொன்றும் முக்கியமான போக்குவரத்து மற்றும் சாலை குறித்த தகவல்களை தருகின்றன. இந்தக் கட்டுரையில் அந்த நிறங்களின் அர்த்தங்களை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் மேப்பில் உள்ள நிறங்களின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

17 May 2025 14:47 PM

சமீபகாலமாக பெரும்பாலான இந்தியர்கள் பயணங்களில் மிக முக்கியமாக பயன்படுத்தும் டிஜிட்டல் சேவையாக கூகுள் மேப் (Google Maps) மாறியுள்ளது. புதிய ஊர்களுக்கு செல்லும்போதோ, அல்லது தினசரி அலுவலகத்திற்கு செல்லும்போது டிராஃபிக் (Traffic) தவிர்க்க இது மிகுந்த பயனளிக்கிறது. கூகுள் மேப் அறிமுகாகும் முன் ஒரு புதிய இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் அங்குங்கு நிறுத்தி வழி கேட்டு செல்ல வேண்டியிருக்கும்.  ஆனால் கூகுள் மேப் பயணங்களின் போது பெருமளவில் கைகொடுக்கிறது.  குறிப்பாக  நாம் செல்லும் பகுதிகளில் டிராஃபிக் அதிகம் இருந்தாலும் முன் கூட்டியே கூகுள் மேப் அறிவுறுதுத்துகிறது. இந்த நிலையில் கூகுள் மேப்பில் பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம், ஊதா, பழுப்பு போன்ற நிறங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இவை வெறும் டிசைன் அல்ல. இவற்றின் பின்னால் முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

கூகுள் மேப் இல்லாமல் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னைகள்

கூகுள் மேப் இல்லாத காலகட்டத்தில் இந்தியர்கள் பயணங்களின் போதும் சந்திக்கும் பிரச்னைகள்,

  • வழிதவறும் பட்சத்தில் பயண நேரம் அதிகரிக்கும்.

  • டிராஃபிக்கில் சிக்கி கொள்வது

  • வழி கேட்டு செல்ல வேண்டிய நிலை.

  • பயணத்தில் எதிர்பாராத தாமதம்

  • புதிய இடங்களுக்கு செல்லும்போது சந்திக்கும் பிரச்னைகள்

இந்த பிரச்னைகளை சரி செய்ய கூகுள் மேப்  எனும் டிஜிட்டல் நண்பர் உதவிகரமாக இருக்கிறார். இந்த நிலையில் கூகுள் மேப்பில் உள்ள நிறங்களின் அர்த்தங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பச்சை கோடு (Green Line)

இந்தக் கோடு உங்கள் வழியில் டிராஃபிக் போன்ற போக்குவரத்து இடையூறுகள் எதுவும் இல்லாமல் சீராக செல்லலாம் என்பதை காட்டுகிறது. கிரீன் லைனை தேர்ந்தெடுத்து பயணிக்கும் போது எந்தவித தடையும் இல்லாமல் உங்கள் பயணம் விரைவாக முடியும்.

மஞ்சள் அல்லது ஆரஞ்சு கோடு (Yellow/Orange Line)

நாம் செல்லும் பாதையில் சிறிய டிராஃபிக் இருப்பதை இது குறிக்கிறது. பெரிய தாமதம் எதுவும் இருக்காது, ஆனால் வேகம் சற்று குறைவாக இருக்கும். இருப்பினும் நல்ல வழியாக இது கருதப்படுகிறது.

சிவப்பு கோடு (Red Line)

இந்த கோடு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நிலையைக் குறிக்கிறது. அதிக வாகன நெரிசல் அல்லது டிராஃபிக் ஜாம் உள்ளது என்பதை நமக்கு இது உணர்த்துகிறது. சிவப்பு கோடு அடர்த்தியாக இருந்தால், மிகவும் மோசமான நிலை. வேறு வழியை தேர்வு செய்வது நல்லது.

நீலம் (Blue Line)

நீங்கள் ஒரு இடத்திலிருந்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல  கூகுள் மேப் பரிந்துரைக்கும் வழி இது. இது நீங்கள் ஒரு இடத்துக்கு விரைவாக செல்ல வழி என கூகுள் மேப் பரிந்துரைக்கிறது.

ஊதா கோடு (Purple Line)

இது பொதுவாக ஒரு மாற்று வழியைக் குறிக்கிறது.   நாம் செல்லும் வழியில் அதிக டிராஃபிக் இருந்தால், கூகுள் மேப் இந்த வழியை பரிந்துரை செய்யும். சற்றே நீளமானதும், சிறிய போக்குவரத்துடன் இருக்கக்கூடியதும் இது.

பழுப்பு கோடு (Brown Line)

இது சாலை உயரமான பகுதி அல்லது மலைப்பாதையைக் கடக்க வேண்டும்  என்பதை நமக்கு முன் கூட்டியே அறிவுறுத்துகிறது.  மலைப்பகுதியில் பயணிக்கும் போது, இது பயனுள்ளதாக இருக்கும்.

கூகுள் மேப்பில் உள்ள நிறங்களை புரிந்து கொண்டால், உங்கள் பயண அனுபவம் எளிமையாகும். நேரத்தை சேமிக்க முடியும். மேலும் நாம் செல்லும் சாலையில் வரப்போகும் பிரச்னைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். ஒரு வேளை டிராஃபிக் இருந்தால் முன் கூட்டியே அந்த வழியை தவிர்க்க முடியும்.  இதன் நிறங்கள் நமது ஸ்மார்ட் டிராவல் அஸிஸ்டன்ட் என்றே சொல்லலாம். இனி கூகுள் மேப்பை பயன்படுத்தும்போது அதில் உள்ள நிறங்களின் அர்த்தத்தை புரிந்து பயன்படுத்துங்கள்