Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadhaar Card : ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

How to Lock Aadhaar Biometric Data Online | இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டில் பெயர், முகவரி என தனிப்பட்ட தகவல்கள் இருக்கும் நிலையில், கை ரேகை, கண் ரேகை உள்ளிட்ட முக்கிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Aadhaar Card : ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jun 2025 16:05 PM

இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு ஆதார் கார்டு (Aadhaar Card) மிகவும் கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லை என்றால் பல வேலைகளை செய்ய முடியாத சுழல் நிலவி வருகிறது. எனவே ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் ஆதார் கார்டு வைத்து இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆதார் கார்டு, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI – Unique Identification Authority of India) வழங்கப்படும் ஒரு அடையாள அட்டை ஆகும். இந்த அடையாள அட்டையில் ஒரு தனி நபரின் பெயர், முகவரி, வயது, புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமன்றி அந்த நபரின் கைரேகை மற்றும் கண் ரேகை உள்ளிட்ட முக்கியமான பயோமெட்ரிக் விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்கள் திருடப்படும் அபாயம்

இந்த அடையாளங்கள் ஒருவரின் தனிப்பட்ட மற்றும் முக்கிய அடையாளங்களாக விளங்கும் நிலையில் அவை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. தற்போதைய நிலவரத்தின்படி பொதுமக்கள் பல இடங்களில் ஆதார் கார்டை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையில், அவர்களின் தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் திருடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அந்த விவரங்கள் திருடப்படாமல் பாதுகாக்க பயோமெட்ரி விவரங்களை லாக் செய்வது எப்படி என்பது குறித்து விளைவாக பார்க்கலாம்.

ஆதாரில் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் My Aadhaar போர்டலுக்கு செல்ல வேண்டும்.
  2. அதில் Lock மற்றும் Unlock ஆதார் கார்டு என்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
  3. அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் தகவல்களை முழுவதுமாக படித்து முடித்த பிறகு, Next எப்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  4. அதில், ஆதார் எண், முழு பெயர், பின் கோடு, கேப்ட்சா கோடு உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
  5. மேற்குறிப்பிட்ட விவரங்களை பதிவிட்ட பிறகு Send OTP என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  6. இதற்கு பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவிட்டு சமர்பிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக ஆன்லைனில், ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்துக்கொள்ளலாம். இவ்வாறு ஆதாரில் உள்ள பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்வதன் மூலம் முக்கிய விவரங்கள் திருடப்படுவதை தடுத்து மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.