Samsung Galaxy S25 Edge : இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்.. சிறப்பு அம்சங்கள் என்ன?
Samsung Galaxy S25 Edge Smartphone Introduced in India | சாம்சங் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. சாம்சங் ஏப்ரல் 2025 புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த நிலையில், மே 2025-ல் மட்டும் இதுவரை இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்
இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் போன் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது சாம்சங் (Samsung). இந்த நிறுவம் மொபைல் போன்கள் மட்டுமன்றி, தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. சாம்சங் நிறுவனம் சிறந்த அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், மொபைல் வாங்க நினைக்கும் பலரின் தேர்வாக இது உள்ளது. சாம்சங் நிறுவனத்திற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில், அந்த நிறுவனம் அவ்வப்போது பல புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்
NEW VIDEO – The Samsung Galaxy S25 Edge is official, and it makes the Ultra look chunky… nobody is asking for super thin phones, but here we are:
5.8mm thin
Snapdragon 8 Elite
6.7″ QHD 120Hz OLED
200MP main camera
12MP Ultrawide
3900mah battery
99 USDFull video:… pic.twitter.com/RaDzNj3hz4
— Marques Brownlee (@MKBHD) May 13, 2025
சாம்சங் நிறுவனம் அவ்வபோது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. 2025 ஏப்ரல் மாதத்தில் சாம்சங் நிறுவனம் தனது சாசங் கேலக்சி எம்56 (Samsung Galaxy M56) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து மே 11, 2025 அன்று சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்சி எஃப் 56 5ஜி (Samsung Galaxy F56 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததை. அதனை தொடர்ந்து இன்று (மே 13, 2025) சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ் – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் Quad HD+AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப் டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்சல் மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3900 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 25 வாட்ஸ் சார்ஜிங் அம்சமும் இதில் உள்ளது. 12GB RAM+256GB ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ரூ.1,09,999-க்கும், 12GB RAM+512GB ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ரூ.1,21,999-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.