Lava : அசத்தல் அம்சங்களுடம் வெறும் ரூ.7,999 மற்றும் 9,999-க்கு அறிமுகமான லாவாவின் புதிய ஸ்மார்ட்போன்கள்!

Lava Launched Two Budget Smartphones | லாவா நிறுவனம் 2023 ஆம் ஆண்டு தனது லாவா ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், சுமார் 1.5 ஆண்டுகள் கழித்த ஸ்டார்ம் சீரீசில் இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Lava : அசத்தல் அம்சங்களுடம் வெறும் ரூ.7,999 மற்றும் 9,999-க்கு அறிமுகமான லாவாவின் புதிய ஸ்மார்ட்போன்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

15 Jun 2025 21:10 PM

லாவா (Lava) நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போன் சீரீஸில் (Storm 5G Smartphone Series) புதியதாக இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. லாவா ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போன் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சுமார் 1.5 ஆண்டுகள் கழித்து லாவா தற்போது இந்த இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், லாவா அறிமுகம் செய்துள்ள இந்த லாவா ஸ்டார்ம் பிளே (Lava Storm Play) மற்றும் லாவா ஸ்டார்ம் லைட் (Lava Storm Lite) ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்டார்ம் பிளே மற்றும் ஸ்டார்ம் லைட் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களிலும் 6.75 இன்ஸ் HD+ ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போன்கள் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளன. ஸ்டார்ம் பிளே ஸ்மார்ட்போனில் 7060 டைமன்சிட்டியும், ஸ்டார்ம் லைட் ஸ்மார்ட்போனில் 6400 டைமன்சிட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ம் பிளே ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ள நிலையில், ஸ்டார்ம் லைட் ஸ்மார்ட்போன் 4GB RAM, 64 GB மற்றும் 128 GB ஸ்டோரேகை கொண்டுள்ளது.

மேலும் பல அட்டகாசமான அம்சங்கள்

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் டூயல் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் IMX752 பிரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ம் பிளே 18W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ள நிலையில், ஸ்டார்ம் லைட் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை

லாவா ஸ்டார்ம் பிளே ஸ்மார்ட்போன் ரூ.9,999-க்கும், லாவா ஸ்டார்ம் லைட் ஸ்மார்ட்போன் ரூ.7,999-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லாவா ஸ்டார்ம் பிளே ஸ்மார்ட்போன் ஜூன் 19, 2025 முதல் விற்பனைக்கு வரும் நிலையில், லாவா ஸ்டார்ம் லைட் ஸ்மார்ட்போன் ஜூன் 24, 2025 முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அமேசானில் வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.