Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்திய சூப்பர் ஆப்! இதில் என்ன ஸ்பெஷல்?

SwaRail: இந்திய ரயில்வே புதிததாக ஸ்வாரெயில் (SwaRail) என்ற சூப்பர் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயணிகளுக்கு ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வழங்கும் முற்றிலும் ஒருங்கிணைந்த செயலியாக இருக்கும். பயணிகள் தற்போது இதனை பீட்டா (Beta) வெர்ஷனில் உள்ள ஆப்பை பரிசோதனை முயற்சியாக பயன்படுத்தி, தங்கள் கருத்துகளை பகிரலாம்.

இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்திய சூப்பர் ஆப்! இதில் என்ன ஸ்பெஷல்?
இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்திய சூப்பர் ஆப்
karthikeyan-s
Karthikeyan S | Published: 21 Mar 2025 10:30 AM

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்பாதை (Indian Railways) நெட்வொர்க்கை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. எளிய மக்கள் தங்கள் பயணம் செய்வதற்கு ரயிலையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். மேலும் நீண்ட தூர பயணத்துக்கு மிகவும் ஏற்றதாகவும் பாதுகாப்பானதாகவும் மக்கள் ரயில் பயணத்தை கருதுகிறார்கள். மக்கள் கூட்டம் நிறைந்த நகர்ப்புறப் பகுதிகளில் இருந்து கிராமபுறங்களை இணைக்கும் ஒரு கருவியாக ரயில்வே செயல்படுகிறது. இந்திய ரயில்கள் நாள்தோறும் கோடிக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். குறைந்த செலவில் பயணிக்கக்கூடிய ஸ்லீப்பர் பெட்டிகள்  முதல் சிறந்த அனுபவத்தை தரும் வந்தே பாரத் ரயில்கள் (Vande Bharat) வரை மக்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப ரயில்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். தக்காளி சாதம், சாம்பார் சாதம் முதல் பாசிப்பயறு, சுண்டல், சமோசா என வரை பல்வேறு உணவு வகைகள், பயணிகளின் மாறுபட்ட கலாச்சாரம் என இந்திய ரயில்பயணம் வெறும் போக்குவரத்து மட்டுமல்ல, மறக்க முடியாத ஒரு அனுபவம்.

அனைத்து சேவைகளுக்கும் ஒரே ஆப்

இந்த நிலையில் இந்திய ரயில்வே புதிததாக ஸ்வாரெயில் (SwaRail) என்ற சூப்பர் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயணிகளுக்கு ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வழங்கும் முற்றிலும் ஒருங்கிணைந்த செயலியாக இருக்கும். பயணிகள் தற்போது இதனை பீட்டா (Beta) வெர்ஷனில் உள்ள ஆப்பை பரிசோதனை முயற்சியாக பயன்படுத்தி, தங்கள் கருத்துகளை பகிரலாம். இந்த சூப்பர் ஆப் பல்வேறு ரயில்வே சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கிறது. இனி பயணிகள்  ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த செயலி ரயில்வே தகவல் அமைப்பு மையம் (CRIS) ஆல் உருவாக்கப்பட்டதாகும். இதன் பீட்டா பதிப்பு தற்போது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

புதிய ஆப்பினால் என்ன பயன்?

பயணிகள் முன்பதிவு ரயில் டிக்கெட் பெறுவதற்கு ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஐஆர்சிடிசி செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ரயில்வே நிலையங்களில் உள்ள கவுண்டர்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. மேலும் முன் பதிவில்லாத டிக்கெட் வாங்க, UTS என்ற செயலியிலோ அல்லது ரயில் நிலையத்திற்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். ஒருமுறை டிக்கெட் எடுக்க ஐஆர்சிடிசி தளத்தில் ஒவ்வொருமுறை லாகின் செய்ய வேண்டிய சிரமம் இருந்தது.

ஆனால் இந்த ஸ்வாரெயில் என்ற ஆப்பின் மூலம் முன்பதிவு மற்றும் டிக்கெட்டுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற முடியும். இதில் ஒரு முறை லாகின் செய்தால் போதும். நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை. ஒவ்வொரு தேவைகளுக்கும் தனித்தனியாக மொபைல் ஆப்களை வைத்திருக்க தேவையில்லை. பிஎன்ஆர் தகவல்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம். உணவுகளை ஆர்டர் செய்யவும் இந்த ஒரே ஆப் போதும். மேலும் ரயிலில் ஏதெனும் அசௌகரியங்கள் நேர்ந்தால் இதன் மூலம் புகார் அளிக்கலாம்.  டிக்கெட் புக் செய்வதற்கு, ரயிலின் வருகை குறித்து அறிவதற்கு, பிஎன்ஆர் நிலை அறிவதற்கு என இதுவரை தனித்தனியான ஆப்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இனி அதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐகூ 10 ப்ரோ பிளஸ் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ஐகூ 10 ப்ரோ பிளஸ் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?...
Pomegranate: தினமும் மாதுளையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !
Pomegranate: தினமும் மாதுளையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !...
வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்!
வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்!...
அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா?
அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா?...
புயல் காரணமாக நடுவானில் விமானம் சேதம் - பயத்தில் அலறிய பயணிகள்
புயல் காரணமாக நடுவானில் விமானம் சேதம் - பயத்தில் அலறிய பயணிகள்...
டெல்லியில் கனமழை! மின் தடை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
டெல்லியில் கனமழை! மின் தடை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!...
ஏஸ் முதல் நரிவேட்ட வரை... இந்த வார தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!
ஏஸ் முதல் நரிவேட்ட வரை... இந்த வார தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!...
ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!
ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!...
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?...
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்...
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!...