Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம்.. பாரத் டாக்சியை அறிமுகம் செய்த மத்திய அரசு!

Bharat Taxi Service Introduced In India | இந்தியாவில் ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஜனவரி 01, 2026 முதல் பாரத் டாக்சி சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பொதுமக்கள் பயணம் செய்யலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Jan 2026 00:15 AM IST
இந்தியாவில் பொதுமக்களின் பயண தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த செயலிகளை பயன்படுத்தி ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட பயண தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். 

1 / 5
என்னதான் ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தினாலும், அதில் அவர்கள் சில சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், அரசு அறிமுகம் செய்துள்ள பாரத் டாக்சியில் இந்த சிக்கல்கள் எதுவும் இருக்காது என கூறப்படுகிறது. 

2 / 5
காரணம் அரசின் இந்த பாரத் டாக்சியில் ஓட்டுநர்கள் எந்த வித கமிஷனும் செலுத்த வேண்டியது இல்லை. ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளில் ஓட்டுநராக உள்ளவர்கள் அந்த நிறுவனங்களுக்கு கமிஷன் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் பயணம் செய்யும் பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணம் வசூல் செய்கின்றனர். 

3 / 5
ஆனால், பாரத் டாக்சியில் அந்த சிக்கல் எதுவும் இருக்காது. காரணம், பாரத் டாக்சியில் ஓட்டுநர்கள் அரசுக்கு எந்த வித கமிஷனும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதன் காரணமாக பயணிகள் செலுத்தும் மொத்த பணமும் ஓட்டுநர்களுக்கு சென்றுவிடும். இதன் காரணமாக ஓட்டுநர்களும் கூடுதல் கட்டணம் கேட்க மாட்டார்கள். 

4 / 5
இந்த பாரத் டாக்சியில் முதல் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.30 நிலையான கட்டணம் வசூலிக்கப்படும். 4 கிலோ மீட்டர் தூரம் முதல் 12 கிலோ மீட்டர் தூரம் வரை ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் 12 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் ரூ.18 கட்டணம் வசூகிலிக்கப்படும். 

5 / 5