திருவள்ளூரில் ஷாக்.. வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை.. அதிர வைக்கும் காரணம்!
Tiruvallur Crime News : திருவள்ளூர் மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்விரோதம் காரணமாக, நாட்டு வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், இந்த கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞர்
திருவள்ளூர், ஜூன் 26 : திருவள்ளூரில் நாட்டு வெடி குண்டு வீசி இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. இதில், மேலும், இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பேரம்பாக்கம் பகுதியில் 2025 ஜூன் 25ஆம் தேதியான நேற்று இரவு 11 மணியளவில் முகேஷ், தீபன் மற்றும் ஜாவித் ஆகிய மூன்று பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் முகேஷ் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இருப்பினும், அந்த கும்பலை முகேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். மேலும், வெடிகுண்டு வீச்சில் படுகாயம் அடைந்த ஜாவித், தீபனை அரிவாளால் வெட்டினர். இதில், தீபன் கை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜாவித்துக்கு தலையில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனே அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீபன், ஜாவித்தை உடனே ஆம்புலன்ஸில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மப்பேடு போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும், முகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அப்போது, முகேஷை கொலை செய்தது ஆகாஷ் மற்றும் அவரது கும்பல் என தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட முகேஷ் சிலிண்டர் போடும் வேலை செய்து வந்தார். அவரது தம்பி ஜீவா. ஜீவாவும், ஆகாசும் நண்பர்களாக இருந்து வந்தனர். இவருக்கு வேலைக்கு செல்லாம், மதுப்பழக்கம், போதைப் பொருள் போன்றவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதனால், தனது தம்பியை ஜீவாவை ஆகாஷூடன் சேர முகேஷ் தடுத்துள்ளார். மேலும், தன்னுடன் சிலிண்டர் போடும் வேலைக்கு அழைத்து சென்றிருக்கிறார். இதனால், முகேஷ் மற்றும் ஆகாஷ் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
5 பேர் கைது
இதனை அடுத்து, முகேஷை, ஆகாஷ் மற்றும் அவரது கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக ஆகாஷ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஐந்து பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முகேஷை கொலை செய்ததை ஆகாஷ் போலீசாரிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும், சம்பவ இடத்தில் திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி தலைமையிலான போலீசார் தீவிர விசாணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.