“விஜய் கை காட்டுபவரே வேட்பாளர்”.. சீட் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தவெக எச்சரிக்கை!!

வேட்பாளர் தேர்வு குறித்து நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆனந்த், 2026 தேர்தலில் தவெக சார்பில் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் தவெகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று தெரிவித்துள்ளார்.

விஜய் கை காட்டுபவரே வேட்பாளர்.. சீட் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தவெக எச்சரிக்கை!!

தவெக விருப்ப மனு

Updated On: 

21 Feb 2026 08:30 AM

 IST

சென்னை, பிப்ரவரி 21: தவெக வேட்பாளர்களை விஜய்தான் அறிவிப்பார் என்றும், தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசியலில் புதிய வரவாகத் தடம் பதித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தீவிரமான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அக்கட்சித் தலைமை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் படிக்க: ரூ.1,020 கோடி ஊழல்.. “அமைச்சர் கே.என்.நேருவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்”.. விஜய் வலியுறுத்தல்

விருப்ப மனு பெற அலைமோதிய தொண்டர்கள்:

சட்டசபை தேர்தலையொட்டி தவெக சார்பில் கடந்த 7ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டது. முதல் நாளில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டதால் பனையூர் ஸ்தம்பித்தது. இதனால், அப்பகுதி வாசிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, கட்சி தலைமைக்கு தபாலில் அனுப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

3,800 பேர் மட்டுமே சமர்பித்த விருப்ப மனு:

அதன்படி, தவெகவினர் போட்டிப்போட்டு விண்ணப்பித்தனர். கிட்டதட்ட 30,000க்கு மேற்பட்டோர் விருப்பமனு பெற்றதாக கூறப்படுகிறது. விருப்பமனுவை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான நிறைவு நாளான நேற்று, 3,800 பேர் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருந்தனர். சிலர் நேரிலும் வந்து வழங்கினர். அவற்றை தொகுதி வாரியாக தொகுக்கும் பணி நேற்று நடந்தது. இதனை பொதுச்செயலாளர் ஆனந்த் பார்வையிட்டார். விரைவில், வேட்பாளர் நேர்காணலை தவெக தொடங்க உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலும் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மார்ச் 10ம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் கை காட்டுபவரே வேட்பாளர்:

இதற்கிடையே, வேட்பாளர் தேர்வு குறித்து நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆனந்த், 2026 தேர்தலில் தவெக சார்பில் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் தவெகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர். 234 தொகுதிகளிலும் போட்டியிட கூடிய ஒவ்வொரு வேட்பாளரையும் விஜய்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

மேலும் படிக்க: மதுரையில் நடைபெறும் திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு.. சிறப்புரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்..

மோசடியில் ஈடுபட்டால் நடவடிக்கை:

எனவே தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக யாராவது மோசடி செய்வது கட்சி தலைமைக்கு தெரியவந்தால் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கட்சி விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?