110 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் வெப்பநிலை.. தென் மாவட்டங்களில் கொட்டும் மழை.. வானிலை நிலவரம் இதோ..

கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் அதிகபட்சமாக 42.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து திருத்தணியில் 40.6, திருச்சியில் 40.9, மதுரையில் 40.5, நாமக்கல்லில் 40.1, ஈரோட்டில் 41.4, கரூரில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 40.2 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

110 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் வெப்பநிலை.. தென் மாவட்டங்களில் கொட்டும் மழை.. வானிலை நிலவரம் இதோ..

கோப்பு புகைப்படம்

Published: 

01 May 2026 14:53 PM

 IST

வானிலை நிலவரம், மே 1, 2026: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பதிவாகி வருகிறது. அந்த வகையில், சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை ஒடிசா முதல் மன்னார் வளைகுடா வரை, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, மே 1ஆம் தேதி (இன்று) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 7ஆம் தேதி வரை தொடரும் கனமழை:

அதேபோல், மே 2ஆம் தேதி (நாளை) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 3ஆம் தேதி, நீலகிரி, கோவை மலைப்பகுதிகள், திருப்பூர் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

Also Read: “200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி; இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு”.. செல்வப்பெருந்தகை காட்டம்!

அதேபோல், மே 4ஆம் தேதி நீலகிரி, கோவை மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 5ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என்றும், இந்த நிலை மே 7ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

110 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் வெப்பநிலை:

மழை ஒரு பக்கம் இருந்தாலும், வெப்பநிலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.

அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் அதிகபட்சமாக 42.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து திருத்தணியில் 40.6, திருச்சியில் 40.9, மதுரையில் 40.5, நாமக்கல்லில் 40.1, ஈரோட்டில் 41.4, கரூரில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 40.2 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை:

வரவிருக்கும் நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், இதே நிலை தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் நிலவும் சூழலில் தமிழகத்தின் சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடலோர பகுதிகள் என்பதனால் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..