AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமைச்சராகிறார் வன்னி அரசு – திருமாவளவன் அறிவிப்பு

VCK Joins TVK Cabinet: செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக அமைச்சரவையில் விசிக இடம்பெறவுள்ளதாகவும், வன்னி அரசு அமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதன்முதலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில இடம் பெறவுள்ளது.

அமைச்சராகிறார் வன்னி அரசு – திருமாவளவன் அறிவிப்பு
திருமாவளவன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 22 May 2026 06:32 AM IST

சென்னை, மே 4 : செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக அமைச்சரவையில் விசிக இடம்பெறவுள்ளதாகவும், வன்னி அரசு அமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் உயர்நிலைக் குழுவில் பெரும்பான்மையானவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற கருத்தை சொன்னார்கள். அதன் காரணமாக அந்த முடிவை பரிசீலித்து ஏற்றுக்கொண்டோம் என்று தெரிவித்தார்.

தமிழக  அமைச்சரவையில் விசிக

இதன் மூலம் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதன்முதலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில இடம் பெறவுள்ளது. இதற்கு முன் திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும் விசிகவிற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் முதன்முறையாக விசிகவிற்கு இடம் கிடைத்துள்ளது.

இதையும் படிக்க : விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு.. அவர்கள் யார்.. யார்.. தெரியுமா!

திமுகவுடன் கூட்டணி தொடருமா?

இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில் திமுகவுடன் கூட்டணி தொடருமா என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நாளையோ அல்லது அதற்கு மறுநாளோ அதுகுறித்து உங்களிடம் தெரிவிப்பேன் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெற வேண்டும் என்ற வெளிப்படையான அழைப்பை அடுத்து பொதுச்செயலாளர் உட்பட கட்சி உறுப்பினர்களோடு கலந்தாலோசித்தோம். அதில் பெரும்பானவர்களின் கருத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் பங்கேற்பது என்றும் வன்னி அரசுவின் பெயரை பரிந்துரைப்பது என்றும் முடிவவெடுத்துள்ளோம் என்றார்.

தமிழக முதல்வர் விஜய் கடந்த மே 10, 2026 அன்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் அவருடன் 9 பேர் மட்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் மே 21, 2026 காங்கிரஸ் எம்எல்ஏகள் உட்பட 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கான துறைகளும் அறிவிக்கப்பட்டன. அதில் 7 பேர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் மற்றும் 4 பெண்களும் இடம் பெற்றிருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிக்க : தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மீண்டும் 3- ஆம் இடம்.. முதல்வர் விஜய் கருத்தை விளக்கிய பெ.சண்முகம்!

இந்த நிலையில்  தமிழக அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை மட்டும் யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இடம் பெறுமா என்பது குறித்து மே 21, 2026 அன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என திருமாவளவன் அறிவித்திருந்தார்.

அதன் படி தற்போது தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெறும் என்றும் வன்னி அரசுவின் பெயரை பரந்துரைக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மே 22, 2026  காலை அமைச்சரவையில் பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Follow Us