வைகோவிற்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி
Vaiko Hospitalized Due to Illness : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அக்டோபர் 4, 2025 அன்று திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வைகோ
சென்னை, அக்டோபர் 4: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் எம்பி பதவிகாலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில் அவர் தனது கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் வைகோ அக்டோபர் 4, 2025 அன்று திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைகோவிற்கு 81 வயதாகும் நிலையில் அவர் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
உடல்நலக்குறைவு காரணமாக வைகோ மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் வைகோவிற்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சளி, இருமல் மற்றும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து அவர்
உடனடியாக வைகோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வைகோவின் உடல்நலனை டாக்டர்கள் குழு கவனித்து வருகிறது.
இதையும் படிக்க : அரசியல் ஆதாயம் தேட கரூர் பயணம்.. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்!
முன்னதாக அக்டோபர் 4, 2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் திராவிட இயக்கம் சார்பாக நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க வைகோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் வைகோ கொள்வதாக இருந்த நிலையில் தான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் அந்த விழாவில் பங்கேற்பதை ரத்து செய்துள்ளார். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் வைகோ ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனையின் அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : ஒரு மாதம் டைம்.. செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு காலக்கெடு.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பாஜகவிற்கு வைகோ கண்டனம்
மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து காந்தி சிலைக்கு பாஜகவினர் காவி ஆடை அணிவித்ததற்கு வைகோ கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அறிக்கை அவர் வெளியிட்டுள்ள அவர், மதுரையில் ஏழை, எளிய மக்கள் விவசாயிகள் மேலாடை அணியக் கூட வசதி இல்லாமல் வறுமையில் இருந்ததைக் கண்டும் மனம் வருந்திய காந்தி அவர் மேலாடை அணிவதில்லை என உறுதிமொழி எடுத்தார். மதுரையில் அவரது சிலைக்கு காவி ஆடை அணிவித்தது கண்டனத்துக்குரியது என்றார்.