டிச. 5ஆம் தேதி புதுவையில் மக்களை சந்திப்பு.. விஜய்யின் திட்டம் என்ன?

TVK Leader Vijay Campaign: இந்த சூழலில், டிசம்பர் 5, 2025 அன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி கோரினார். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், திட்டமிட்டபடி டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிச. 5ஆம் தேதி புதுவையில் மக்களை சந்திப்பு.. விஜய்யின் திட்டம் என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

30 Nov 2025 06:40 AM

 IST

புதுவை, நவம்பர் 30, 2025: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5, 2025 அன்று புதுச்சேரியில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்னதாக காஞ்சிபுரத்தில் உள்ள அரங்கில் மக்கள் சந்திப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகம் அதற்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் கட்சி தரப்பில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஓருபுறம், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திக்கும் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.

விஜய் சுற்றுப்பயணம்:

முன்னதாக 2025 ஜூன் மாதத்தில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அங்கு ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஒரு மாத காலம் கட்சியின் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை; முற்றிலும் முடங்கியிருந்தது. மேலும் கட்சித் தலைவர் விஜயும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

மேலும் படிக்க: சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை… 47 விமானங்கள் ரத்து – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ஒரு மாதம் கழித்து, அக்டோபர் 27ஆம் தேதி, சென்னை மாமல்லபுரத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் பணிகள் மெல்ல மீண்டும் தொடங்கின.

பொதுச் சின்னம் கோரி விண்ணப்பம்:

இந்திய தேர்தல் ஆணையத்தில், கட்சியினருக்கு ஒரு பொது சின்னம் ஒதுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மக்கள் மனதில் எளிதில் பதியும் வகையிலான பொதுச் சின்னம் ஒன்றை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் படிக்க: தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் மத்திய அரசு.. குட்ட குட்ட குனிய மாட்டோம் – முதல்வர் ஸ்டாலின்..

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு:

இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மீண்டும் மக்கள் சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். முதலில் சேலத்தில் இருந்து இந்த மக்கள் சந்திப்பை தொடங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் போதிய அனுமதி கிடைக்காததால், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பிரத்தியேகமாக QR குறியீடு கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அதுபெற்றவர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து எந்த அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதில் கட்சி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

புதுவையில் டிச. 5 மக்களை சந்திக்கும் விஜய்:

இந்த சூழலில், டிசம்பர் 5, 2025 அன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி கோரினார். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், திட்டமிட்டபடி டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக புதுச்சேரி மாநில தமிழக வெற்றிக்கழகம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்: நிகழ்ச்சியை எவ்வாறு ஒருங்கிணைப்பது, நடைபெறும் இடத்தைத் தேர்வு செய்வது, போதிய பாதுகாப்பை வழங்குவது, போன்ற பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு, டிசம்பர் 5ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புதுச்சேரியில் மக்களை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
5 பவுன் நகைக்காக வரதட்சணை கொடுமை…கணவரே ஆபாச படம் எடுத்து மிரட்டல்…இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!
சென்னையில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்…காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
திருவனந்தபுரம்-தாம்பரம் அம்ரித் பாரத் ரயில் சேவை…நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
நாய் கடிக்கு ஆளான சிறுவன்..பெற்றோரிடம் மறைத்ததால் விபரீதம்…3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்!
கையெழுத்தாகும் பாஜக – அதிமுக கூட்டணி ஒப்பந்தம்.. பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும்?
தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறது ஏர் இந்தியா நிறுவனம்…சென்னை-துபாய் விமான சேவை நிறுத்தம்…என்ன காரணம்?
இயற்கை ஒளியால் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
பணி நீக்கத்தால் தூய்மை பணியாளராக மாறிய இந்தியர்.. ரஷ்ய செய்து நிறுவனம் தகவல்..
மூன்றாம் உலகப்போர்.. பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகுமா?
விமானக் கண்காட்சியின் போது பறவைகள் விபத்து தடுக்க மத்திய அரசின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா?