திருச்சி மக்களுக்கு ஹேப்பி.. நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் பஞ்சப்பூர் பஸ் நிலையம்.. பேருந்துகள் வழித்தட விவரம்!
Trichy Panjapur Bus Terminus : திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் 2025 ஜூலை 16ஆம் தேதியான நாளை முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த பேருந்து முனையத்தில் இருந்து வெளியூர் மற்றும் நகரத்திற்குள் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை, புதுக்கோட்டை, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது.

பஞ்சப்பூர் பேருந்து முனையம்
திருச்சி, ஜூலை 16 : திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் (Panchapur Bus Terminus) 2025 ஜூலை 16ஆம் தேதி நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஜூலை 16ஆம் தேதி நாளை முதல் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் மாவட்டமாக திருச்சி உள்ளது. திருச்சி மாவட்டத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை 2025 மே மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பேருந்து முனையம் திருச்சியின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பெரிதும் உதவும். 40.60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பேருந்து முனையம், நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. வெளியூர் பேருந்துகள் தரைத்தளத்தில் இருந்தும், நகரப் பேருந்துகள் முதல் தளத்தில் உள்ள நான்கு நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். இந்த பேருந்து முனையத்தில் கழிவறைகள், ஏடிஎம் வசதி, ஹோட்டல்கள் போன்றவை இருக்கும்.
Also Read : 17 மணிநேரத்திற்கு பிறகு! ஒரு வழி தடத்தில் தொடங்கிய ரயில் சேவை.. பயணிகள் மகிழ்ச்சி!
நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் பஞ்சப்பூர் பஸ் நிலையம்
#திருச்சிராப்பள்ளியில் வருகின்ற 16-ஆம் தேதி அன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்நேரு அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.@CMOTamilnadu @KN_NEHRU @TNDIPRNEWS pic.twitter.com/6GU9fxLrVW
— Tiruchirappalli City Municipal Corporation (@TrichyCorp) July 13, 2025
இந்த பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்துள்ளது. இந்த நிலையில், பஞ்சப்பூர் பேருந்து முனையம் 2025 ஜூலை 16ஆம் தேதியான நாளை முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. காலை 6 மணி முதல் வெளியூர்கள் மற்றும் நகரத்திற்குள் பேருந்து சேவை இயக்கப்படஉ ள்ளது.
பாலக்கரை, தில்லைநகர், உறையூர், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், வயலூர், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி உள்ளிட்ட அனைத்து முக்கிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறினார்.
Also Read : செஞ்சிக் கோட்டைக்கு கிடைத்த அங்கீகாரம்.. உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ
நகரத்திற்குள் சுமார் 496 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதில், ஸ்ரீரங்கம், மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் வழியாக 69 பேருந்து சேவைகள் இயக்கப்படும். அதே நேரத்தில் தில்லைநகர் மற்றும் மற்றும் உறையூர் வழியாக சமயபுரத்திற்கு 62 பேருந்து சேவை இயக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், சென்னையில் 317 பேருந்துகளும், விழுப்புரத்திற்கு 127, பெங்களூருக்கு 22, கரூர்க்கு 404, திண்டுக்கல்லுக்கு 351, மதுரைக்கு 398, தஞ்சாவூருக்கு 504, புதுக்கோட்டைக்கு 334 சேவைகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.