திருச்சி அருகே தவெக அலுவலகம் மர்ம நபர்களால் தீவைத்து எரிப்பு.. நடந்தது என்ன?

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் தேர்தல் அலுவலகமாக செயல்பட்டு வந்த இந்த இடத்தை மர்ம நபர்கள் தீவைத்து எரித்துள்ளனர். இதில் அலுவலகம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன. சுமார் ரூ.50,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் சாம்பலானதாக கூறப்படுகிறது.

திருச்சி அருகே தவெக அலுவலகம் மர்ம நபர்களால் தீவைத்து எரிப்பு.. நடந்தது என்ன?

தவெக அலுவலகம் தீ வைத்து எரிப்பு

Published: 

01 May 2026 15:44 PM

 IST

மே 1, 2026: பெட்டவாய்த்தலை அருகே, திருச்சி–கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காமநாயக்கன்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இந்த பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட விவசாய அணி அலுவலகம் செயல்பட்டு வந்தது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, இங்கு அமைக்கப்பட்டிருந்த கூரை வேயப்பட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் தினமும் ஒன்று கூடி, அங்கிருந்து பிரச்சாரத்திற்குச் செல்வதும், கூட்டங்கள் நடத்துவதும் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அங்கு கட்சியின் பிளக்ஸ் பேனர்கள், கொடிகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

தவெக அலுவலகம் தீவைத்து எரிப்பு:

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் தேர்தல் அலுவலகமாக செயல்பட்டு வந்த இந்த இடத்தை மர்ம நபர்கள் தீவைத்து எரித்துள்ளனர். இதில் அலுவலகம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன. சுமார் ரூ.50,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் சாம்பலானதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: “200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி; இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு”.. செல்வப்பெருந்தகை காட்டம்!

காலை அங்கு வந்த பொதுமக்கள், சம்பவம் குறித்து உடனடியாக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே, தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் தலைமையிலும் காவல் நிலையத்தில் தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அன்று கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரிக்கை:

மேலும், வாக்கு எண்ணும் நாளன்று ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் ரமேஷ், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக வன்முறை செயல்களை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கை நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுமா என்ற சந்தேகமும் அச்சமும் எழுந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், தலைமைத் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெட்டவாய்த்தலை பகுதியில் தமிழக வெற்றிக் கழக அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
Related Stories
பரோட்டா ரூ.25 ஆக உயர்வு, பிரியாணி விலை? கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்கள் அறிவிப்பு
ஆக்கப்பொறுத்தவர்கள், ஆறப்பொறுங்கள்.. 10 இடங்களிலும் தேமுதிக வெற்றிப்பெறும் – பிரேமலதா விஜயகாந்த்..
110 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் வெப்பநிலை.. தென் மாவட்டங்களில் கொட்டும் மழை.. வானிலை நிலவரம் இதோ..
“200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி; இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு”.. செல்வப்பெருந்தகை காட்டம்!
தொடரும் விஜய்யின் ஆன்மீக பயணம்.. நாளை வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா செல்ல திட்டம்!!
சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பரிவர்த்தனை ரத்து.. பாஸ்டேக் சிக்கலால் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..