திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலையா? காவல் ஆணையர் அருண் விளக்கம்

Tirumala Manager Death Case : திருமலா பால் மேலாளர் நவீன் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது எனவும் அறிவிய்ல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிகிறது எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். நவீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்த நிலையில், இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.

திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலையா?  காவல் ஆணையர் அருண் விளக்கம்

காவல் ஆணையர் அருண்

Updated On: 

12 Jul 2025 19:16 PM

சென்னை, ஜூலை 12 : திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். திருமலா பால் மேலாளர் நவீன் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்த நிலையில், காவல் ஆணையர் அருள் தற்கொலை செய்து கொண்டதாக விளக்கம் அளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நவீன் பஞ்சலால். இவர் புழல் பகுதியில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவர் ரூ.42 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் 2025 ஜூன் 27ஆம் தேதி கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், துணை ஆணையர் வழக்குப்பதிவு செய்யாமல் விசாரித்ததாக தெரிகிறது.

அப்போது, நவீன் தவறை ஒப்புக் கொண்டதகாவும் மூன்று மாதங்களுக்குள் பணத்தை திருப்பி தருவதாகவும் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில், 2025 ஜூலை 9ஆம் தேதி நவீன் கைகள் கட்டப்பட்ட நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், நவீன் இமெயில் ஒன்றையும் திருமலா பால் ஊழியர்கள் மற்றும்  சகோதரிக்கு அனுப்பி இருக்கிறார். அதில்,  கையாடல் செய்த ரூ.5 கோடியை நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டேன் எனவும், எனது தற்கொலைக்கு இரண்டு பேரே காரணம் என கூறியிருக்கிறார்.

Also Read : கொலையில் முடிந்த பிராங்க் கால்.. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. மதுரையில் அதிர்ச்சி!

திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலையா?

கையாடல் பணத்த்தில் தங்களுக்கு பங்கு கொடுக்கவில்லை என்றால் சிறையில் இருப்பதாகவும் நரேஷ் மற்றும் முகுந்த் மிரட்டியதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது,  நவீன் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்தது. அதாவது, நவினின் உடல் மீட்கப்பட்டபோது, அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்கேதம் எழுந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

Also Read : ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்.. ஹேமராஜ் குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி!

காவல் ஆணையர் விளக்கம்

இப்படியான சூழலில் தான், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அருண், ”திருமலா பால் மேலாளர் நவீன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அறிவியில் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரியவந்துள்ளது.

நவீனிடம் துணை ஆணையர் விசாரித்ததாக தகவல் இல்லை. புகார் அளித்தவர்களிடம் தான் ஆரம்ப கட் விசாரணை நடந்துள்ளது. விசாரணைக்கு பின், கொளத்தூர் துணை ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய குற்றப்பிரிவுக்கு முகாந்திரத்தோடு புகார் வந்தால் வழக்குப் பதியப்படும்” என கூறினார்.