Thiruvallur Child Death: திருவள்ளூரில் பெரும் சோகம்! மூச்சுக்குழாயில் கடித்த வண்டு.. ஒரு வயது குழந்தை உயிரிழப்பு!
Child Safety: திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கத்தில், ஒரு வயது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வண்டை விழுங்கியதில் மூச்சுக்குழாயில் சிக்கி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ல் கேரளாவிலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளை வண்டுகள், பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு அவசியம்.

ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
திருவள்ளூர், ஆகஸ்ட் 25: திருவள்ளூர் (Thiruvallur) அருகே தாமரைப்பாக்கத்தில் ஒரு வயது குழந்தை ஒன்று மூச்சுக்குழாயில் வண்டு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிடைத்த தகவலின்படி, குழந்தை (Children) வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது வண்டை பிடித்து விழுங்கியுள்ளது. அப்போது, மூச்சுக்குழாயின் உள்ளே கடித்ததால் குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், கடந்த 2021ம் ஆண்டு கேரளாவிலும் இதேபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியது. அன்றைய சூழ்நிலையிலும், குழந்தையின் மூச்சுக்குழாயில் வண்டு சிக்கி குழந்தை உயிரிழந்தது.
என்ன நடந்தது..?
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் சக்தி நகரில் ஒரு வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அப்போது, கீழே கிடந்த வண்டை எடுத்து விளையாடியுள்ளது. சிறிது நேரம் அதன் ஆபத்தை உணராத சிறு குழந்தை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வண்டை எடுத்து விழுங்கியுள்ளது. குழந்தை முழுங்கிய வண்டானது குழந்தையின் மூச்சுக்குழாய்க்குள் சென்று கடித்துள்ளது. இதனால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
ALSO READ: மதிக்காத மனைவி,மகன்.. பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்!
இதை எதையும் அறியாத குழந்தையின் பெற்றோர் குழந்தைக்கு என்ன ஆனது என்று தெரியாமல், பதறி அடித்துக்கொண்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சையை அளித்துள்ளனர். மருத்துவர்கள் கொடுத்த தீவிர சிகிச்சை பலனளிக்காத நிலையில் குழந்தை இறந்துள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.
ALSO READ: பார்க்கிங் பிரச்னை.. முதியவர் கொலை.. கடலூரில் ஷாக் சம்பவம்!
குழந்தை உயிரிழந்தது தொடர்பாக தாமரைப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், கடந்த 2021ம் ஆண்டு கேரளாவில் ஒரு துயரமான சம்பவம் நடந்தது. கடந்த 2021ம் ஆண்டு கேரளாவின் காசர்கோட்டில் வசித்து வந்த ஒரு குழந்தையும் மூச்சுக்குழாயில் வண்டு சிக்கி இறந்தது. இந்த நிகழ்வுகள், சிறு குழந்தைகள் பூச்சி மற்றும் வண்டு விழுங்குவதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக அவை சுவாசக் குழாயில் சிக்கிக் கொள்ளும்போது உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க, குழந்தைகளைச் சுற்றி, குறிப்பாக பூச்சிகள் மற்றும் வண்டு உள்ள பகுதிகளில், பெற்றோர் குழந்தைகளை விழிப்புடன் பார்த்து கொள்வது முக்கியம்.