Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மக்களே உஷார்.. கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழக்ததில் சில நாட்களில் மழை பெய்து வந்தது. தற்போது மழை குறைந்து, வரும் நாட்களில் வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்.. கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை மையம் அலர்ட்
வெப்பநிலைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Published: 11 Apr 2025 14:39 PM

சென்னை, ஏப்ரல் 11:  தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை (Tamil Nadu Heatwave Alert) 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில்  27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் எனவும் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில்  கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 2025 ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே வெப்பநிலை  அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.

கொளுத்தப்போகும் வெயில்

பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. அதே நேரத்தில் அவ்வப்போது  பல்வேறு மாவட்டங்களில் மழையும் பெய்தது. இருப்பினும், பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் தாக்கம் கடுமையாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், வெப்பநிலை அடுத்த 3 நாட்களுக்கு மேலும் அதிகரிக்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் 2  நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

2025 ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்றும் இருப்பினும் ஓரிரு இடங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் அலர்ட்


குறிப்பாக, 2025 ஏப்ரல் 11,12ஆம் தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என்றும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் 2025 ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதிகளில் வழுவிழந்தது.

இருப்பினும், அதே மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் 2025 ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது என்றும் அதிகபட்சமாக வேலூரில் 40.6 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையும் வேலூரில் 21.6 டிகிரி செல்சியஸ் பதிவாக உள்ளதாக வானிலை  மையம் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்... குடியரசுத் தலைவரிடம் விளக்கிய பிரதமர் மோடி!
ஆபரேஷன் சிந்தூர்... குடியரசுத் தலைவரிடம் விளக்கிய பிரதமர் மோடி!...
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வெயில் கொளுத்துமா?
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வெயில் கொளுத்துமா?...
ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் படத்தின் வீடியோவை வெளியிட்ட படக்குழு
ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் படத்தின் வீடியோவை வெளியிட்ட படக்குழு...
உடல் பருமன்: காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள்
உடல் பருமன்: காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள்...
வெளிநாடு பயணங்களை ரத்து செய்த பிரதமர் மோடி.. பின்னணி என்ன?
வெளிநாடு பயணங்களை ரத்து செய்த பிரதமர் மோடி.. பின்னணி என்ன?...
இந்திய ராணுவம் தாக்குதல்.. மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி
இந்திய ராணுவம் தாக்குதல்.. மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி...
ஜெயிலர் 2 படத்திற்காக மோகன்லாலை சந்தித்த நெல்சன் திலீப்குமார்?
ஜெயிலர் 2 படத்திற்காக மோகன்லாலை சந்தித்த நெல்சன் திலீப்குமார்?...
அறியாமையால் உயிரைக் கொள்ளும் பழக்கங்கள்..உங்களிடம் உள்ளதா?
அறியாமையால் உயிரைக் கொள்ளும் பழக்கங்கள்..உங்களிடம் உள்ளதா?...
பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான்.. துலாம் ராசிக்கான பலன்கள்!
பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான்.. துலாம் ராசிக்கான பலன்கள்!...
LIVE : ஆபரேஷன் சிந்தூர்.. பிரதமர் மோடி ஆலோசனை
LIVE : ஆபரேஷன் சிந்தூர்.. பிரதமர் மோடி ஆலோசனை...
பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது எப்படி? வீடியோ வெளியீடு
பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது எப்படி? வீடியோ வெளியீடு...