ஆபரேஷன் சிந்தூர்.. குடியரசுத் தலைவரிடம் விளக்கிய பிரதமர் மோடி!
PM Modi Meets President Draupadi Murmu : ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

டெல்லி, மே 7 : பிரதமர் மோடி (PM Modi), குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் (Operation sindoor) விளக்கம் அளித்துள்ளார். 2025 மே 7ஆம் தேதியான இன்று பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய எப்படி? ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கினார். 2025 ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், இதற்கு பாகிஸ்தானுக்கு பங்கு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டியது. மேலும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் இந்தியா கூறி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர்
இந்த நிலையில், 2025 மே 7ஆம் தேதியான இன்று நள்ளிரவு பாகிஸ்தான் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கிட்டதட்ட 15 நாட்களுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பிரதமர் மோடி தலைமையில் பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டது. 2025 மே 7ஆம் தேதியான இன்று நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் கிட்டதட்ட 25 நிமிடங்கள் நடந்ததாக ராணுவத்தினர் கூறியுள்ளனர். காஷ்மீரில் உள்ள முசாபராபாத், கோட்லி, குல்பூர், பிம்பர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட், சக் அமரு, முரிட்கே, பஹவல்பூர் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், முக்கிய பயங்கரவாதிகளும் அடங்குவர்.
இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என ராணுவம் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தனர். அப்போது, பயங்கரவாதிகளின் முகாம்கள் எப்படி அழிக்கப்பட்டது போன்ற வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டனர்.
குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி
“Prime Minister Shri @narendramodi called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan and briefed her about Operation Sindoor,” posts President of India (@rashtrapatibhvn) pic.twitter.com/Z5STe2NDuM
— Press Trust of India (@PTI_News) May 7, 2025
அதில், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி பயிற்சி பெற்ற பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இப்படியான சூழலில், பிரதமர் மோடி டெல்லியில் உள்ள ராஷ்ட்ரிய பவனில் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துள்ளார்.
அப்போது, இவருக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அதோடு, ஆபரேஷன் சிந்தூர் எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அவர் விளக்கி உள்ளார். இதற்கிடையில், பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் முர்மு ஆகியோருக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.