அறியாமையால் உயிரைக் கொள்ளும் பழக்கங்கள் – உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதா?
9 Unhealthy Habits: இந்தக் கட்டுரை, நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மெதுவாக அழிக்கும் 9 ஆபத்தான பழக்கங்களை விளக்குகிறது. அதிக வேலை, தவறான உணவுப் பழக்கம், உணர்ச்சிகளை அடக்குதல், சுய பராமரிப்பு இல்லாமை போன்றவை இதில் அடங்கும். இந்தப் பழக்கங்கள் நீண்ட காலத்தில் இதய நோய், நீரிழிவு, மன அழுத்தம் போன்ற தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மனமும் உடலும் நலமாக இருக்க வேண்டுமென விரும்பும் இந்த காலத்தில், நம்மால் ஈடுபடப்படும் சில பழக்கங்கள் நம்மை மெதுவாக அழிக்கும் விஷமாக மாறிவிடுகின்றன. இந்த பழக்கங்கள் ஆரம்பத்தில் சாதாரணமாகத் தெரிந்தாலும், காலப்போக்கில் அதிர்ச்சியளிக்கும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதிக வேலைபளு, தவறான உணவுமுறை, உணர்ச்சிகளை அடக்குதல் போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன. இதனால் மன அழுத்தம், உடல் சோர்வு, இதய நோய், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன. இவற்றை ஆரம்பத்திலேயே உணர்ந்து மாற்றிக் கொள்ளுதல் மட்டுமே தீர்வாகும். இந்த கட்டுரையில், அத்தகைய பழக்கங்களும், அவற்றின் விளைவுகளும் பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. மன அழுத்தம் – அமைதியான கொலையாளி
நாள்பட்ட மன அழுத்தம் ஒரு “சைலண்ட் கில்லர்” என கருதப்படுகிறது. குறுகிய கால மன அழுத்தம் சாதாரணமானது என்றாலும், நீண்ட நாட்கள் மன அழுத்தத்துடன் வாழ்வது இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். ஆரம்ப கட்டத்திலேயே இதனை கட்டுப்படுத்துவது அவசியம்.
2. வெறுப்புடன் செய்யும் வேலை
ஆர்வமின்றி அல்லது வெறுப்புடன் செய்யும் வேலை, உடல் மற்றும் மனநலத்திற்கு ஆபத்தானது. இதனால் தலைவலி, தூக்கமின்மை, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன. தொடர்ச்சியான அதிருப்தி வாழ்க்கையை மெதுவாக நச்சுப்போல் மாற்றும்.
3. நல்வாழ்க்கை சூழலை இழத்தல்
உங்களுடன் நெருக்கமாக பழகும் நபர்கள் உங்கள் நலனை விரும்ப வேண்டும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் நபர்களை விலக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் செயல்கள் உங்கள் மனநலத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்.
4. துரித உணவு பழக்கம்
துரித உணவு (fast food) டிரான்ஸ் கொழுப்பு, சோடியம் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளதால் உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். இவை உடலை மெதுவாக பாதிக்கும்.
5. உணர்ச்சிகளை அடக்குவது
உணர்வுகளை அடக்குவது நல்லதல்ல. அது மன அழுத்தத்தை தூண்டும், மேலும் அது மன நோய்க்கு வழிவகுக்கும். பதற்றம் உண்டாக்கும் சூழ்நிலைகளில் உங்கள் உணர்ச்சிகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்த வேண்டும்.
6. காலை உணவை தவிர்த்தல்
காலை உணவு நாளின் மிக முக்கியமான உணவாகும். அதனை தவிர்ப்பது வளர்சிதை மாற்ற கோளாறு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் நினைவாற்றல் குறைபாடு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
7. தொடரும் கவலை
அடிக்கடி கவலையில் இருக்கின்றது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
8. சுய பராமரிப்பு இழப்பு
உடல் சுத்தம் மட்டும் அல்லாமல் மன சுத்தமும் அவசியம். சுய பராமரிப்பின்மை நாளடைவில் மன சோர்வை ஏற்படுத்தி இதயநோய் போன்ற தீவிர பிரச்சனைகளை உருவாக்கும்.
9. வெகுமதி இல்லாத வாழ்க்கை
தான் செய்த செயலுக்கே தனக்கே பாராட்டு வழங்கும் மனப்பான்மை இல்லாத நிலை விரக்திக்கு வழிவகுக்கும். இது வாழ்க்கையின் மீது ஈர்ப்பு குறைவாகி மனநலக் கோளாறுகளை உருவாக்கும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil News பொறுப்பேற்காது.)