நீலகிரி டூ கோவை.. அடுத்த 2 நாட்களுக்கு வெளுக்கும் கனமழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு 2025 ஜூன் 4,5ஆம் தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு, சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை
சென்னை, ஜூலை 04 : தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் (Tamil Nadu Weather Update) என வானிலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் (Chennai Rains) என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வெயில் அடிக்கும் மே மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும், மழை பெய்யும் ஜூன் மாதத்தில் வெயில் அடித்துது. 2025 ஜூன் மாதத்தில் சில நாட்கள் வெயில் அடித்தாலும், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. அதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களாகவே, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் கூட, மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
கோவை, நீலகிரிக்கு கனமழை அலர்ட்
இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 2025 ஜூன் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 ஜூன் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எப்படி?
Daily Weather Report pic.twitter.com/RFkNQluBCF
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) July 4, 2025
2025 ஜூன் 4,5ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை தூத்துக்குடியில் 38.5 டிகிரி செல்சிஸ், குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 21 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த சில தினங்களுக்கு தமிழக்ததில் பரவலாக மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.