டெல்டா டூ சென்னை… தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. வெதர்மேன் அலர்ட்!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் இன்று (2025 ஆகஸ்ட் 24) மிதமான மழையே பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சென்னையில் மாலை நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை, ஆகஸ்ட் 24 : தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 24ஆம் தேதியான இன்று மிதமான மழையே பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளது. சென்னையிலும் மாலை நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த நான்கு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, ”தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 24ஆம் தேதியான இன்று வறண்ட வானிலையே நிலவும். ஒருசில இடங்களில் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர டெல்டா பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, வெயிலின் தாக்கம் இருக்கும். மேலும், வறண்ட வானிலையே நிலவும். மாலையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, பாளையங்கோட்டையில் வெப்பநிலை சுமார் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
Also Read : குளு குளுவென மாறிய சென்னை.. இடி மின்னலுடன் தொடரும் கனமழை – பிரதீப் ஜான்..
தமிழகத்தில் வெளுக்கும் கனமழை
TWM’s Weather Snippet – 24.08.2025
===================
🌤️ Tamil Nadu – Predominantly dry, with isolated thunderstorms possible in a few districts. The coastal delta belt has a slight chance of rains.🌴 Kerala – Subdued monsoon conditions; mostly dry along the west coast.
☀️…
— Tamil Nadu Weatherman (@praddy06) August 23, 2025
திருச்சி, கரூர், ஈரோடு மாவட்டங்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும். மேலும், காலை நேரங்களில் லேசான மழை பெய்யும்” என தெரிவித்துள்ளார். மற்ற மாநிலத்தை பொறுத்தவரை, கேரளாவில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மும்பையில் அவ்வப்போது மிதமான மழை பெய்யக் கூடும். ஹைதராபாத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” என தெரிவித்துள்ளது.
Also Read : சென்னையில் 12 செ.மீ மழை.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
வங்கக் கடலில் நாளை உருவாகும் காற்றழுத்தம்
2025 ஆகஸ்ட் 25ஆம் தேதியான நாளை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஒடிசா – மேற்கு வங்கக் கடலோர பகுதிகளுக்கு அப்பால், வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.