Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வயதான தலைவர்களால் இளைஞர் சலிப்படைந்துள்ளனர்.. ஆதவ் அர்ஜுனா பேச்சு!

Tamil Nadu Vetri Kazhagam Booth Committee Meeting | தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் இன்று (ஏப்ரல் 26, 2025) கோவையில் தொடங்கியது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வயதான தலைவர்களால் இளைஞர் சலிப்படைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

வயதான தலைவர்களால் இளைஞர் சலிப்படைந்துள்ளனர்.. ஆதவ் அர்ஜுனா பேச்சு!
ஆதவ் அர்ஜுனா
vinalin-sweety
Vinalin Sweety | Published: 26 Apr 2025 21:13 PM

கோயம்புத்தூர், ஏப்ரல் 26 : வயதான தலைவர்களால் இளைஞர் சலிப்படைந்துள்ளனர் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK – Tamilaga Vetri Kazhagam) தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். கோயம்புத்தூரில் இன்று (ஏப்ரல் 26, 2025) நடைபெற்ற  தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துக்கொண்ட அவர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியபோது இவ்வாறு பேசியுள்ளார். பூத் கமிட்டி கூட்டம் இன்றும் (ஏப்ரல் 26, 2025), நாளையும் (ஏப்ரல் 27, 2025) நடைபெற உள்ள நிலையில், ஏராளமான தொண்டர்கள் கோயம்புத்தூருக்கு வருகை புரிந்துள்ளனர். இந்த நிலையில்,  பூத் கமிட்டி கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோயம்புத்தூரில் நடைபெறும் தவெக பூத் கமிட்டி கூட்டம்

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூரில் பூத் கமிட்டி கூட்டம் நடத்தி வருகிறது. மொத்தம் இரண்டு நாட்கள் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று (ஏப்ரல் 26, 2025) 10 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், நாளை (ஏப்ரல் 27,2025) 12 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்பார்கள் என்று தவெக அறிவித்திருந்தது. அதன்படி, இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வந்த தவெக தலைவர் விஜய்க்கு ஏராளமான தொண்டர்கள் சாலையில் திரண்டு வரவேற்பு வழங்கினர்.

தொண்டர்கள் வெள்ளத்தில் வந்த தவெக தலைவர் விஜய்

பின்னர் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்று பேசிய தவெக தலைவர் விஜய், நாம் ஆட்சிக்கு வருவதே மக்களுக்காக தான். மக்களோடு எப்படி ஒருங்கிணைந்து பணியாற்றப்போகிறோம் என்பதற்கான பயிற்சி பட்டரை தான் இது. இதற்கு முன் நிறையே பேர் வந்திருக்கலாம். நிறைய பொய்களை சொல்லியிருக்கலாம். மக்களை ஏமாத்தியிருக்கலாம். இதெல்லாம் செய்து ஆட்சியை பிடித்திருக்கலாம். அதெல்லாம் பழைய கதை. அதற்காக நான் இங்கு வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பூத் கமிட்டி கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா

அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனாஅ, காங்கிரஸ் மற்றும் திமுக போல தவெக 100 வருட கட்சியாக உருவெடுக்க போகும் நாள் இன்று என்று கூறியுள்ளார். தவெகவில் அனைவரும் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள். 1967 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் இதே இளைஞர்களால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வயதான தலைவர்களால் இளைஞர்கள் சலிப்படைந்துவிட்டனர். ஊழல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். விமர்சனங்களை கண்டு எங்களுக்கு பயமில்லை என்று கூறியுள்ளார்.

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...