இரண்டு நாள் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு.. எத்தனை லட்சம் பேர் எழுதுகின்றனர்? முழு விவரம்..

TET Exam: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் "டெட்" (TET) எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுதல் அவசியம். தமிழகத்தில் பல லட்சம் பேர் இந்த தேர்வை இன்னும் எழுதாமல், தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இந்த நிலையில், இந்த தேர்வு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இரண்டு நாள் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு.. எத்தனை லட்சம் பேர் எழுதுகின்றனர்? முழு விவரம்..

கோப்பு புகைப்படம்

Published: 

15 Nov 2025 11:41 AM

 IST

சென்னை, நவம்பர் 15, 2025: தமிழகத்தில் நவம்பர் 15, 2025 மற்றும் நவம்பர் 16, 2025 ஆகிய இரண்டு நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. இந்த தகுதி தேர்வை எழுதுவதற்காக 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடத்தப்படுகிறது. அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு இன்றும் நாளையும், அதாவது நவம்பர் 15 மற்றும் 16, 2025 நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை பெறப்பட்டன.

ஆசிரியர் தகுதி தேர்வு:

இந்த தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தாள் ஒன்று நவம்பர் 15, 2025 அன்று நடைபெறுகிறது. தாள் இரண்டுக்கான தேர்வு நாளை, அதாவது நவம்பர் 16, 2025 அன்று நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை, தேர்வு நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: ‘SIR பணிகளுக்கு ஒரு மாத காலம் போதுமானது’.. சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் “டெட்” (TET) எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுதல் அவசியம். தமிழகத்தில் பல லட்சம் பேர் இந்த தேர்வை இன்னும் எழுதாமல், தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இந்த நிலையில், இந்த தேர்வு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

4.80 லட்சம் பேர் எழுதும் டெட் தேர்வு:

இந்த தேர்வை எழுத இடைநிலை ஆசிரியர்கள் 1,07,370 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 3,73,438 பேரும், மொத்தமாக 4,80,808 பேரும் விண்ணப்பித்துள்ளனர். நவம்பர் 15, 2025 இன்று இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் முதல் நாள் தாள் தேர்வு, மறுநாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுகிறது.

மேலும் படிக்க: பீகார் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம் – முதலமைச்சர் ஸ்டாலின்..

ஹால் டிக்கெட் பதிவிறக்கம்:

ஆனால் இந்த தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிலருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடவுச்சொல்லை மறந்து விட்டதால் ஹால் டிக்கெட்டை பெற முடியாத நிலை உருவானது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம், தங்களது இணையதளத்தில் (HTBS) “Hall Ticket Download” என்ற பகுதிக்கு சென்று, TET Hall Ticket என்பதை தேர்வு செய்து, தாள் ஒன்று அல்லது தாள் இரண்டு என்பதை தெரிவு செய்து, ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண் / விண்ணப்ப எண் / மின்னஞ்சல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பதிவு செய்து, பிறந்த தேதியை உள்ளிடினால் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவித்துள்ளது.