SSLC Class 10 results 2026: வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. எப்படி பார்ப்பது?
Tamil Nadu SSLC Class 10 results 2026: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கிட்டத்தட்ட 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியிருந்தனர்.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கிட்டத்தட்ட 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியிருந்தனர். தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த சூழலில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்:
- www.tnresults.nic.in
- www.dge.tn.gov.in
- results.digilocker.gov.in
தேர்வர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவர்களின் தேர்ச்சி விகிதம்:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மொத்தம் 8,21,150 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாநில அளவில் 94.31 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்களை விட மாணவிகள் 4.32 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சென்னையில் இரவோடு இரவாக போலீசார் நடத்திய வேட்டை.. 75 ரவுடிகள் கைது..
அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு 97.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் 97.54 சதவீதம், தஞ்சாவூர் 97.41 சதவீதம், திருச்சி 97.31 சதவீதம் மற்றும் கன்னியாகுமரி 97.30 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.
முடிவுகளை பார்ப்பது எப்படி?
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், அவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்திருந்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
அதேபோல், WhatsApp செயலி மூலமாகவும் தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இதற்காக 7845252525 என்ற எண்ணை கைப்பேசி தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணிற்கு “Hi” என அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி.. முழு விவரம்..
பின்னர் வரும் வழிமுறைகளை பின்பற்றி துறையின் பெயர் மற்றும் வகுப்பைத் தேர்வு செய்து, தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால், தேர்வு முடிவுகள் WhatsApp உரையாடல் மூலம் கிடைக்கும்.
தேர்வு முடிவுகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தேர்வர்கள் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.