Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பள்ளிகள் திறப்பில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

Tamil Nadu School Reopen : தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி, 2025 ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என தகவல்கள் வெளிவந்த நிலையில், அன்பில் மகேஷ் உறுதியாக கூறியுள்ளார்.

பள்ளிகள் திறப்பில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
அமைச்சர் அன்பில் மகேஷ்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 May 2025 11:14 AM

சென்னை, மே 17 :   தமிழகத்தில் திட்டமிடப்படி 2025 ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  (tamil nadu school reopen) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Minister Anbil Mahesh) அறிவித்துள்ளார். கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்குமா என மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.  சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வி வளாகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்பின்பு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, பள்ளிகள் திறப்பு குறிப்பு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசுகையில், ” 2025 ஜூன் 2ஆம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும். அதில் எந்தவித மாற்றமில்லை” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பில் மாற்றமா?

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 ஏப்ரல் மாதத்தில் மத்தியிலேயே கோடை விடுமுறை தொடங்கியது. அதாவது, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 ஏப்ரல் 18ஆம் தேதி கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2024 ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கியது.

எனவே, மாணவர்களுக்கு 2025 ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. கிட்டதட்ட மாணவர்ளுக்கு 52 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, 2025 ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கிடையில், கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என்ற கேள்வி எழுந்தது.

அதாவது, 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்தே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்தது. இதனால், மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் இருந்தது. இதனால், வரும் நாட்களில் வெப்பநிலை உயரும் என வானிலை மையமும் எச்சரிக்க விடுத்து வந்தது.

அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

இதனால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என சொல்லப்பட்டது. மேலும், கோடை வெயிலின் அளவு குறித்து குழு கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் கடந்த மாதம் கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து, மழை பெய்து வருகிறது.

வெயிலின் தாக்கமும் சற்று குறைந்துள்ளது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என வானிலை மையமும் கூறியிருக்கிறது. எனவே, பள்ளிகள் திறப்பு திட்டமிட்டபடி 2025 ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என அமைச்சர்  அன்பில் மகேஷ் நேற்று அறிவித்திருக்கிறார்.  தற்போடு, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தீவிரமாக மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இமுவரை அரசுப் பள்ளிகளில் புதிதாக 1.79 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை!...
கூகுள் மேப்பில் உள்ள நிறங்களின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
கூகுள் மேப்பில் உள்ள நிறங்களின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?...
பணியில் இருந்து விலகிய பிறகு பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?
பணியில் இருந்து விலகிய பிறகு பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?...
துப்பாக்கிச்சத்தம் அல்ல..! கிரிக்கெட் பேட் சத்தம்.. நடந்தது என்ன?
துப்பாக்கிச்சத்தம் அல்ல..! கிரிக்கெட் பேட் சத்தம்.. நடந்தது என்ன?...
நீரஜ் சோப்ரா இதுவரை பதிவு செய்த அதிகபட்ச டாப் 5 த்ரோஸ்..!
நீரஜ் சோப்ரா இதுவரை பதிவு செய்த அதிகபட்ச டாப் 5 த்ரோஸ்..!...
மனைவியை கொன்ற கணவன்.. உடலை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்!
மனைவியை கொன்ற கணவன்.. உடலை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்!...
ரேஷன் கார்டு இல்லாமல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாமா?
ரேஷன் கார்டு இல்லாமல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாமா?...
திருமண தடை நீக்கும் சாஸ்தா கோயில்.. எங்கே இருக்கிறது தெரியுமா?
திருமண தடை நீக்கும் சாஸ்தா கோயில்.. எங்கே இருக்கிறது தெரியுமா?...
மே 31-க்குள் இதை செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து ஆகலாம்!
மே 31-க்குள் இதை செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து ஆகலாம்!...
மேடையில் கண் கலங்கிய உதவியாளர்.. சமந்தா செய்த விஷயம்!
மேடையில் கண் கலங்கிய உதவியாளர்.. சமந்தா செய்த விஷயம்!...
கனிமொழிக்கு புதிய பொறுப்பு கொடுத்த பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?
கனிமொழிக்கு புதிய பொறுப்பு கொடுத்த பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?...