என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை.. மொழிப்போர்த் தியாகிகள் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு..

CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது" என குறிப்பிட்டுள்ளார்.

என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை.. மொழிப்போர்த் தியாகிகள் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு..

கோப்பு புகைப்படம்

Published: 

25 Jan 2026 08:05 AM

 IST

ஜனவரி 25, 2026: ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதில், அன்றும், இன்றும், என்றும் இந்திக்கு இங்கு இடமே இல்லை என குறிப்பிட்டுள்ளார். 1960-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நாளாக மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தி மொழியை கட்டாயமாகத் திணிப்பதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பலர் தங்களின் உயிரைத் தியாகம் செய்தனர்.

மொழிப்போர் தியாகிகள் தினம்:

1965ஆம் ஆண்டு, இந்திய அரசு இந்தியை இந்தியாவின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. இதற்கு எதிராக தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. தமிழ் உள்ளிட்ட தாய்மொழிகள் புறக்கணிக்கப்படுமோ என்ற அச்சமே இந்தப் போராட்டங்களுக்கு காரணமாக இருந்தது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களில் உயிரிழந்தவர்கள் மொழிப்போர் தியாகிகள் என போற்றப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: இன்று தவெக செயல்வீரர்கள் கூட்டம்.. முக்கிய முடிவெடுக்கும் விஜய்?

தமிழ் மொழி மற்றும் மொழி உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் சின்னமாக இந்த நாள் விளங்குகிறது. இந்தியாவில் பன்மொழிக் கொள்கை நிலைத்திருக்க இந்தப் போராட்டங்கள் முக்கிய பங்காற்றின. மொழிச் சமத்துவம் மற்றும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை இந்தப் போராட்டங்கள் ஏற்படுத்தின. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றன.

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை:

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.

இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?