உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கம்.. என்னென்ன சேவைக்கு மனு அளிக்கலாம்? முழு விவரம்!

Ungaludan Stalin Scheme : மக்களின் குறைகளை அவர்கள் இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்படுகிறது. நகர்ப்புறங்களில் 3,768, ஊரக பகுதிகளில் 6,232 என மொத்தம் 10 ஆயிரம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கம்.. என்னென்ன சேவைக்கு மனு அளிக்கலாம்? முழு விவரம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கம்

Updated On: 

15 Jul 2025 11:57 AM

சென்னை, ஜூலை 15 : ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை (Ungaludan Stalin Scheme) முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin) தொடங்கி வைத்துள்ளார். மக்களின் குறைகளை அவர்கள் இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படுகிறது. 2025 ஜூலை 14ஆம் தேதியான நேற்று சென்னையில் இருந்து ரயில் மூலம் சிதம்பரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். சிதம்பரம் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2025 ஜூலை 15ஆம் தேதியான இன்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக, 2025 ஜூலை 15ஆம் தேதியான இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். நகர்ப்புறங்களில் 3,768, ஊரக பகுதிகளில் 6,232 என மொத்தம் 10 ஆயிரம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாம்கள் 2025 நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற உஉள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளில் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. இதில் குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு இந்த முகாமில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. தகுதயுள்ள மற்றும் விடுபட்ட பெண்கள் இந்த முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விண்ணப்பிக்க வேண்டும். இந்த முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிப்பவர்ளுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : மக்கள் ஆதரவு பெருக பொறுப்பும் கடமையும் கூடுகிறது – முதல்வர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுரை

45 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு


முன்னதாக, இந்த திட்டம் குறித்து விளக்கம் அளித்த வருவாய்த் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பி. அமுதா கூறுகையில், “உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், தங்கள் மனுவை கையாளும் துறை/அதிகாரி குறித்து மக்களுக்குத் தெரிவிக்கப்படும். மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு எடுக்கப்படும். முதற்கட்டமாக 30 நாட்களில் தீர்வு எடுக்கப்படும். சில மனுக்களை 30 நாட்களில் தீர்க்க முடியாது.

Also Read : ” திருவள்ளுவருக்கு காவியடித்துத் திருடப் பார்க்கிறார்கள் “ – வள்ளுவர் மறை வைரமுத்து உரை நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

எனவே, 45 நாட்கள் வரை மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்படும். முகாம்களை நடத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும ஆறு முகாம்கள் நடத்தப்படும்” என தெரிவித்தார்.