அரசுப் பள்ளிகளில் அசுர வேகத்தில் மாணவர் சேர்க்கை.. ஒரே வாரத்தில் ஒரு லட்சத்தை கடந்து சாதனை!

தொடர்ந்து மே, ஜூன் மாதங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 2025-2026-ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சுமார் 4 லட்சம் எண்ணிக்கை அளவில் இருந்தது.

அரசுப் பள்ளிகளில் அசுர வேகத்தில் மாணவர் சேர்க்கை.. ஒரே வாரத்தில் ஒரு லட்சத்தை கடந்து சாதனை!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

28 Apr 2026 14:19 PM

 IST

தமிழக அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை இந்த கல்வியாண்டில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 1 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளில் கடந்த காலங்களை விட மாணவர் சேர்க்கை தற்போது அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் உயர்த்தப்படுவதோடு, அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்:

தமிழக அரசின் சார்பில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த காலை உணவுத் திட்டம் வருகிற ஆண்டில் 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், சைக்கிள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயிலும் போது மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் மருத்துவ படிப்பு, தொழில்நுட்பப்படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அரசு பள்ளிகளில் கட்டணம் எதுவும் இல்லாமல் இலவசமாக அனைத்தும் தகுதி, தடையின்றி கிடைப்பதால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரிப்பு வருகிறது.

ஒரு லட்சத்தை கடந்தது:

அந்த வகையில், வருகிற கல்வி ஆண்டுக்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகுந்த ஆர்வமுடன் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது. வருகிற 2026-2027-ம் கல்வி ஆண்டுக்கு மழலையர் வகுப்புகளில் 6,796 பேரும், 1-ம் வகுப்பில் 97,737 பேரும், 2 முதல் 8-ம் வகுப்பு வரை 8,178 பேரும் என மொத்தம் 1,12,711 மாணவர்கள் இதுவரை சேர்ந்துள்ளனர். இன்னும் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆசிரியர்கள் பலர் தேர்தல் பணிக்கு சென்றதால் அரசு பள்ளிகளில் சேர்க்கையில் தொய்வு இருந்தது. தற்போது தேர்தல் பணி முடிவடைந்ததால், மாணவர் சேர்க்கை மீண்டும் வேகமெடுத்துள்ளது.

மேலும் படிக்க: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை.. தொடர்ந்து 2வது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி!

5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை இலக்கு:

தொடர்ந்து மே, ஜூன் மாதங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 2025-2026-ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சுமார் 4 லட்சம் எண்ணிக்கை அளவில் இருந்தது. அதனை விட அதிகமாக வருகிற கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசின் கல்வித்துறை முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?