ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. சிறப்பு மலை ரயில் இயக்கம்.. டைமிங் இதுதான்!
Nilgiri Mountain Train Service : விடுமுறை காலங்களில் மேட்டுப்பாளையம் ஊட்டி வழித்தடத்தில் சிறப்பு மலை ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. நீலகிரி மலைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது பயணிகள் கூட்ட நெரிசலை குறைத்து எளிதாக பயணிக்க முடியும்.

ஊட்டி மலை ரயில் சேவை
நீலகிரி, ஆகஸ்ட் 24 : சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பை தொடர்ந்து, ஊட்டி மலை ரயில் பாதையில் (Nilgiri Mountain Train Service) கூடுதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால், ஊட்டி மலை ரயில் சேவை பலரால் பயன்படுத்த முடியவில்லை. இதனால், சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் ஈஸியாக பயணிக்க முடியும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி சுற்றுலாவுக்கு பெயர்ப்போனது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஊட்டிக்கு ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா சென்று வருகின்றனர். குறிப்பாக, மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிமாகவே இருக்கும். அதிலும், ஊட்டி மலை பாதையில் ரயிலில் பயணிக்கவே சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இதனால், ஊட்டி மலை ரயிலில் கூட்டம் அதிமாகவே இருக்கும். இதனை கருத்தில் கொண்ட சேலம் ரயில்வே கோட்டம் சிறப்பு மலை ரயில் சேவையை தொடங்கியுள்ளது.
இந்த சிறப்பு மலை ரயில் சேவை, 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில் 2025 ஆகஸ்ட் 30, செப்டம்பர் 5, செப்டம்பர் 7, அக்டோபர் 2, அக்டோபர் 4, அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 19 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு சிறப்பு ரயில் காலை 9:10 மணிக்குப் புறப்பட்டு மதியம் 2:25 மணிக்கு ஊட்டிக்கு வந்தடைகிறது.
Also Read : அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து.. பயணிகளுக்கு என்னாச்சு? திருவள்ளூரில் பரபரப்பு
சிறப்பு மலை ரயில் சேவை இயக்கம்
Special Trains on#NilgiriMountainRailway
Between Mettupalayam – Udagamandalam &
Udagamandalam – Coonoor.@GMSRailway pic.twitter.com/cnrmZWvsck— DRM Salem (@SalemDRM) August 20, 2025
இதேபோல், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 2025 ஆகஸ்ட் 24, ஆகஸ்ட் 31, செப்டம்பர் 6, செப்டம்பர் 8, அக்டோபர் 3, அக்டோபர் 5, அக்டோபர் 18 மற்றும் அக்டோபர் 18, அக்டோபர் 20 ஆகிய தேதிகளில் சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஊட்டியில் இருந்து காலை 11:25 மணிக்குப் புறப்பட்டு மாலை 4:20 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்கு சென்றடைகிறது.
இந்த சிறப்பு மலை ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க கட்டணமாக மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு கட்டணம் ரூ.1,105 வசூலிக்கப்படுகிறது. மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு ரூ.1,470 வசூலிக்கப்படுகிறது.
Also Read : மயிலாடுதுறையில் அதிர்ச்சி… ஒரே நாளில் 20 பேரை கடித்து குதறிய தெருநாய்கள்.. தீவிர சிகிச்சை!
இதில், இரண்டாம் வகுப்பு கட்டணமாக குன்னூருக்கு ரூ.715, ஊட்டிக்கு ரூ.965 வசூலிக்கப்படுகிறது. அதேபோல, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை முதல் வகுப்பு கட்டணம் ரூ.1470 ஆகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.965 ஆகவும் உள்ளது.ஊட்டியிலிருந்து குன்னூர் வரை முதல் வகுப்பு கட்டணம் ரூ.525, இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.365 வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.