சிவகங்கை அஜித் குமார் மரணம்.. விசாரணையை துவங்கிய சிபிஐ.. அடுத்து என்ன?

Sivaganga Custodial Death : சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கின் விசாரணையை சிபிஐ துவங்கி உள்ளது. தமிழக காவல்துறையினரிடம் ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், பிரிவு 103ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

சிவகங்கை அஜித் குமார் மரணம்.. விசாரணையை துவங்கிய சிபிஐ.. அடுத்து என்ன?

அஜித் குமார்

Updated On: 

12 Jul 2025 18:19 PM

சென்னை, ஜூலை 12 : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கின் (Sivaganga Custodial Death) விசாரணையை சிபிஐ (CBI) தொடங்கி உள்ளது. தமிழக காவல்துறையிடம் இருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 103 (கொலைக்கான தண்டனை) இன் கீழ் பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், விசாரணை அதிகாரிக டிஎஸ்பி மோகித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் 2025 ஜூலை 13ஆம் தேதியான நாளை மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையை ஒரு வாரத்திற்குள் விசாரணை அதிகாரியை நியமித்து ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஐக்கு உத்தரவிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அஜித் குமார் மரண வழக்கு

சிவகங்கை மாவட்டம் திருப்புவம் அருகே மடப்புரம் கோயில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் 27 வயதான அஜித் குமார். 2025 ஜூன் 27ஆம் தேதி நகை திருட்டு புகார் ஒன்றில் அஜித் குமாரை திருப்புவனம் போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அதாவது, மதுரையைச் சேர்ந்த நிகிதா என்பவர் சம்பவத்தன்று கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது, காரை பார்க்க செய்ய வேண்டும் அஜித் குமாரிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால், தனக்கு கார் ஓட்ட தெரியாத என்று கூறிய அஜித் குமார், வேறு ஒருவரை அழைத்து காரை பார்க் செய்ததாக கூறப்படுகிறது.

Also Read : திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலையா? காவல் ஆணையர் அருண் விளக்கம்

பின்னர், கோயிலுக்கு சென்றுவிட்டு காருக்கு வந்த நிகிதா தனது நகை காணவில்லை என புகார் அளித்தார். இது தொடர்பாக 2025 ஜூன் 27ஆம் தேதி நகை திருட்டு புகார் ஒன்றில் அஜித் குமாரை திருப்புவனம் போலீசார் அழைத்து சென்றுள்ளனர். மறுநாள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது.

இதற்கிடையில், போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டதாக குற்றச்சாட்டினர். இது தொடர்பாக 5 தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அஜித் குமாரை காவலர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதில், காவலர்கள் தாக்கி கொலை செய்யப்பட்டது உறுதியானது.

Also Read : பிரபல ரவுடி கொலை.. காரில் வைத்து கும்பல் செய்த கொடூரம்.. திண்டுக்கல்லில் பயங்கரம்!

மேலும், பிரேத பரிசோதனையிலும் அஜித் குமாரின் உடலில் 44 காயங்கள் இருந்தது தெரியவந்தது. அண்மையில் நடந்த விசாரணையில், அஜித் குமார் விசாரணையின் போது உயிரிழந்ததாக உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்திருந்தது.  இந்த சூழலில்,   இந்த வழக்கின் விசாரணை சிபிஐ தொடங்கியது குறிப்பிடத்தக்கது.