‘போடா’ கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டிய திமுக எம்எல்ஏ.. அதிர்ச்சி வீடியோ.. கடும் கண்டனம்!

Sankarapuram Dmk Mla Udhayasuriyan : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன் இளைஞரை மிரட்டிய காட்சிகள் வெளியாகி உள்ளது. உறுப்பினர் சேர்க்கையின்போது, இளைஞர் சாலை வசதிகள் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, எம்எல்ஏ உதயசூரியன் அவரை போடா என கூறி மிரட்டி இருக்கிறார்.

போடா’ கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டிய திமுக எம்எல்ஏ..  அதிர்ச்சி வீடியோ.. கடும் கண்டனம்!

எம்எல்ஏ உதயசூரியன்

Updated On: 

29 Jul 2025 17:29 PM

கள்ளக்குறிச்சி, ஜூலை 29 : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் இளைஞரை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சாலை போடவில்லை என கூறிய இளைஞர் போடா எனக் கூறி, எம்எல்ஏ உதயசூரியன் மிரட்டி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, கண்டனத்தை எழுப்பி இருக்கிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், தற்போது அனைத்து கட்சிகளும் பரபரப்புரையை தொடங்கி உள்ளன. குறிப்பாக, ஆளும் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்பதை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் அனைத்து தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தொட்டியம் கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

அப்போது, சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன் உடன் இருந்தார். அங்கிருந்த இளைஞர் ஒருவர், சாலை வசதிகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதாவது, ”நீங்கள் சாலைகள் போடவில்லை. உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் இங்க வருகிறீர்கள்” என கேள்வி எழுப்பினார். இதற்கு திமுக எம்எல்ஏ உதயசூரியன், “போடா” என கூறினார். தொடர்ந்து, “என்னிடம் மரியாதையுடன் பேசுங்கள், இல்லையெனில் நீங்கள் என்னிடமிருந்து அடி வாங்குவீர்கள்” எனவும் கூறியுள்ளார். அதற்கு அந்த நபர், “நான் மரியாதையுடன் பேசுகிறேன்” என்று பதிலளித்தார்.

Also Read : நெல்லை ஆணவக் கொலை.. கொலையாளியின் போலீஸ் பெற்றோர் சஸ்பெண்ட்

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேமாக பரவியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சாலைகளின் நிலை குறித்து எம்.எல்.ஏ. உதயசூரியனிடம் கேள்வி எழுப்பியவர் கட்சி உறுப்பினர் என்று மூத்த தி.மு.க. தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.   இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில  தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read : நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்களுக்கு இதுதான் பயன்.. விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கண்டனம்


இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த நான்கு வருடங்களாக கால் வைக்கும் இடங்களிலெல்லாம், கையில் கிடைக்கும் துறைகளிலெல்லாம் ஊழல் செய்துவிட்டு, தேர்தல் நெருங்கும் காலத்தில் ஒன்றும் தெரியாதது போல் மக்களை சென்று நலம் விசாரித்தால் இதுதான் நடக்கும். கோடிக்கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது” என தெரிவித்துள்ளார்.