Rithanya Suicide Case: ரிதன்யா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கணவர் உட்பட 3 பேருக்கு ஜாமீன்.. அதிர்ச்சியில் ரிதன்யா குடும்பத்தார்!
Chennai High Court Bail: திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர், மாமியார், மாமனார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்த ஜாமீன் உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடியோ தடயங்கள், உடற்கூராய்வு அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கு விசாரணை தொடர்கிறது.

ரிதன்யா தற்கொலை வழக்கு
திருப்பூர் மாவட்டத்தில் திருமணமான சில மாதங்களிலேயே ரிதன்யா (Rithanya Suicide Case) என்ற இளம் பெண் கடந்த 2025 ஜூன் மாதம் தனது காரில் தற்கொலை (Suicide) செய்துகொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரிதன்யாவின் கணவர், மாமனார் மற்றும் மாமியாருக்கு நிபந்தனை சென்னை உயர்நீதிமன்றம் (Chennai High Court) நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது ரிதன்யாவின் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஜாமீன் வேண்டி மனுதாக்கல்:
திருப்பூர் மாவட்டத்தை அடுத்த அவிநாசி பகுதியில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப்பெண்ணான ரிதன்யா தனது அம்மாவிடம் கோயில் செல்வதாக கூறி தனது காரில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர் கவின்குமார், மாமியார் சித்ரா தேவி, மாமனார் ஈஸ்வர மூர்த்தி ஆகியோர் ஜாமீன் வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் தொடர்ந்திருந்தனர். முன்னதாக, இந்த மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், ரிதன்யாவின் முழுமையான உடற்கூராய்வு, தடயவியல் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
ALSO READ: வறுமையில் வாடிய குடும்பம்.. 3 பெண்கள் எடுத்த விபரீத முடிவு.. விருதுநகரில் அதிர்ச்சி!
இந்நிலையில், ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 21ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கவின் உடனான திருமணத்திற்கு முன்பே தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா தற்கொலை செய்யும் மனநிலையில் இருந்திருக்கிறார். இந்த திருமணத்தில் ரிதன்யாவிற்கு விருப்பமும் இல்லை. அதேநேரத்தில், ரிதன்யாவிற்கு வரதட்சணை துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என்ற காரணத்திற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
தற்போதைய விசாரணை குறித்த நிலை அறிக்கையையும் காவல்துறை தரப்பிலான வழக்கறிஞர் தாக்கல் செய்தது. அதில், ரிதன்யாவின் ஆடியோ மெசேஜ் தடயவியல் ஆய்வுக்கு ஏற்கனவே அனுப்பிவிட்டதாகவும், அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ரிதன்யா தரப்பிலான வழக்கறிஞர், ரிதன்யா துன்புறுத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதன்படி, மனுதாரர்கள் செல்வாக்கானவர்கள் என்பதால் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
நீதிபதி உத்தரவு:
Tamil Nadu: Ridhanya, 27, took her life just three months after marriage, tortured for dowry despite giving 100 sovereigns (800 gm) of gold and a ₹70L Volvo.
She sent seven audio notes to her father before her de@th💔 pic.twitter.com/mWGcO4M45o
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 30, 2025
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறது. அதில், முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது என்பதால் மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க அவசியம் இல்லை எனக் கூறி ரிதன்யாவின் கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ALSO READ: பச்சிளம் குழந்தையை வீடு புகுந்து கவ்விச்சென்ற தெருநாய்.. அதிர்ச்சி சம்பவம்!
நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், இந்த வழக்கில் முழுமையாக காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது என்றும் ஜாமீன் வழங்கப்பட்ட மூவருக்கும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார். மேலும், அவிநாசி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.